டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2020

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு


முதுநிலைப் பொறியியல், எம்பிஏ, எம்சிஏ சேர்க் கைக்கான 'டான்செட்' தேர்வு முடிவுகள் இணையதளத்தில் செவ் வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள், கலை அறிவியல் கல்லுாரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ, எம் ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொதுநுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கானடான்செட் தேர்வு கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி நடந்தது. எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ஆம் தேதியும், எம்இ, எம் ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ஆம் தேதியும் தேர்வு நடந்தது. இந்த தேர்வை , 33 ஆயிரத்து 416 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், டான்செட் தேர்வுகளுக்கான முடிவுகள் செவ் வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

டான்செட் தேர்வு முடிவு களைtancet.annauniv.edu/cet20/என்ற தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். வரும் 23-ஆம் தேதிக்குள் மாணவர் கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி