பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: அடுத்த வாரம் துவங்கும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: அடுத்த வாரம் துவங்கும்?


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் நடந்தன. அதில், பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும்முடிந்து விட்டன; பிளஸ் 1க்கு மட்டும், ஒரு பாடத்துக்குதேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால், கல்வித் துறையில், அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது; இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.மாவட்ட வாரியாக, விசாலமான, இட வசதி உள்ள பள்ளிகள், விடை திருத்தும் மையங்களாக அமைக்கப்பட உள்ளன.

சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்தல் போன்ற, கொரோனா வைரஸ் ஒழிப்பு நடைமுறைகளும், விடைத்தாள் திருத்த மையங்களில், கடைப்பிடிக்கப்பட உள்ளன.

அதேபோல, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், முகக் கவசம் வழங்கப்படுவதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, மையங்கள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10 comments:

  1. வேறு மாவட்டத்தில் இருப்பவர்கள் அங்கேயே பேப்பர் திருத்த வாய்ப்பு உள்ளதா

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்

      Delete
    2. It's best for other district teachers

      Delete
    3. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்க்கு பயண நேரம் 7-8மணி நேரம் பஸ் நன்றாக இயங்கும் போதே ஆகும். இப்போ????

      Delete
  2. ஆசிரியர்கள் வசிக்கும் பகுதி அருகே மையங்கள் அமைத்தல் சிறந்தது தனியார் பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் சிறந்ததாக இருக்கும் . இன்னும் தனியார் பள்ளி ஆசிரியர் ஏப்ரல் மாதம் சம்பளம் தரப்படவில்லை

    ReplyDelete
    Replies
    1. காலையில் உள்ளே செல்லும் போது கை சோப்பு போட்டு கழுவுவர்கள். கிருமி நாசினி அடிப்பார்கள்.உள்ளே சென்ற பிறகு தும்மல் வந்தால் பரவாதா

      Delete
    2. நம்பிக்கை தானே வாழ்க்கை?

      Delete
    3. April ah even May salary not credited yet...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி