ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்காது ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2020

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்காது !


ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி பாதிக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் தெரிவித்தார் .

ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது :

10 - ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் மையங்கள் , கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது . தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.தேர்வு மையங்களை  கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

கரோனா தொற்று காரணமாக
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் , அந்தந்தப் பகுதியிலேயே தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்குவது குறித்து 18 - ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் அறிவிக்கப்படும் .

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஜக்டோ - ஜியோ அமைப்பினர் புறக்ககணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர் . அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

7 comments:

  1. இவர்கள் ஏன் அடிக்கடி போராட்டம்,போராட்டம் என்று கூறுகிறார்கள்.எண்ண பிரச்சினை?இதில் பாதிக்கப்போவது அரசா?இல்லை மானவர்களா?

    ReplyDelete
  2. கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும் பரவாயில்லயா..

    ReplyDelete
    Replies
    1. கண்ணீர் சிந்தினால் பரவாயில்லை உயிர் போனால் யார் திருப்பிக் கொடுப்பது

      Delete
  3. சம்பளத்தை பிடுங்கு...
    இல்லை வேலைய பிடுங்கு...
    ஸ்ட்ரைக் வராது...

    ReplyDelete
    Replies
    1. சொல்வன யாவர்க்கும் எளிய அறியவாம் சொல்லிய வண்ணம் செயல்

      Delete
  4. போராட்டம் என்பது தற்கால அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல.. வருங்கால அரசு ஊழியர்களுக்கும் சேர்த்துதான் அதை புரிந்து கொள்ளுங்கள்.. விரைவில் உள்ளே வந்து தெரிந்து கொள்ளுங்கள்... வருங்கால அரசு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி