ஜூலை மாதம் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு : 1-8 மாணவர்களுக்கு தனி திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2020

ஜூலை மாதம் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு : 1-8 மாணவர்களுக்கு தனி திட்டம்


இந்தியாவில் ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் மண்டல வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். துவக்க நிலையில் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருவார்கள்.

இந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகள் முதலில் திறக்கப்படும். துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடருவார்கள். தனிமனித இடைவெளியை பராமரிப்பதற்காக 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.

மண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், இது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிகள் முழு வீச்சில் செயல்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

கொரோனா பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை சிறு குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால், அவர்கள் தற்போதைக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்களைத் தொடருவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும். இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும், இதற்கு ஒப்புதல் அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

மார்ச் 16 முதல், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது அனைவரின் மனதிலும் உள்ள ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.

அநேகமாக, ஜூலை மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தனிமனித இடைவெளி பராமரிக்கப்பட்டு, 30% மாணவர் வருகையுடன், பள்ளிகள் இரண்டு ஷிஃப்டுகளில் இயக்கப்படக்கூடும்.

கொரோனா கட்டுபாடு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், மற்றவர்களை பின்பற்றச் செய்யவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளியில் எந்த வித கூட்டங்களும் நடைபெறாது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

11 comments:

  1. வரவேற்கிறோம்

    ReplyDelete
  2. Students ku safe solurdhu o.k teacher ku...

    ReplyDelete
  3. நடைமுறை சிக்கல் நிறைய உள்ளது

    ReplyDelete
  4. Would it be feasible to teach students of6th to8th classesthrough online

    ReplyDelete
  5. What about 12th students to join for colleges ?

    ReplyDelete
  6. ஆசிரியர் பயிற்சிகளை ஆன்லைனில் அளிப்பது சிறந்தது.
    குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற கண்டிப்பான அறிவுறுத்தலுடன்.
    ஓர் ஆசிரியர் பாதிக்கப்பட்டால் அவரிடம் பயிலும் வகுப்பிற்கு முப்பது மாணவர்கள் வீதம் 6,7& 8 ஆசிரியர்களால் 90 மாணவர்கள் வரை பாதிப்படைய வாய்ப்புண்டு என்ற உண்மையை உணர்ந்தபடி

    ReplyDelete
  7. கிராமப்புற மாணவர்களுக்கு online class என்பது சாத்தியமற்றது அதுவும் 1 -8 வகுப்புகளுக்கு. பல பெற்றோர்களிடம் android mobile இல்லை என்பது தான் களநிலவரம்.

    ReplyDelete
  8. Veetil ukkara vaithu sampalam kodukkanum. Jolly kondadattum.

    ReplyDelete
  9. super.please start higher sec classes.

    ReplyDelete
  10. 30sathavitham manvargalna puriyala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி