7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2020

7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்!


7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணிந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

4 comments:

  1. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றோம். 2013 -ல் தேர்ச்சி பெற்று தற்போது சான்றிதழ் காலாவதியாகப் போகிறது. இடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் என்று மைக்கை நீட்டும்போதெல்லாம் கூறினார். ஆனால் நிரப்பப்படவே இல்லை இன்று வரை. இப்படி போட்டித் தேர்வுகளுக்கே படித்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? தேர்ச்சி பெற்று என்ன பிரயோஜனம்... 2013-ல் தேர்ச்சி பெற்று காலாவதியாகப் போகிறது சான்றிதழ். கல்வித்துறை கைவிட்டு விட்டதா....

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒன்பது வருடங்களாக போராடும் போது இப்படிப்பட்டவர்கள் ஏன் குறுக்கே வருகிறார்கள்? இந்த ஆட்சியாளர்கள் இப்படி அருமையான வாரத்தில் மூன்று அரைநாள் மற்றும் 12 நாட்களுக்கு என்று மட்டும் ஒரு போஸ்ட் உருவாக்கி மற்ற நாட்களில் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படி இவர்கள் குடும்பம் நடத்துவார்கள் என்பது கூட தெரியாமல் இந்த சிறப்பான ஆசிரியர் பணியினைக் கொடுத்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் போட்ட இந்த வேலைக்கு எவ்வளவு போராட்டம் செய்தும் 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்றாமல் வெறும் 7700 கொடுக்கிறார்கள். அதிலும் மே மாதம் சம்பளம் கிடையாது. இந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளுமா யோசிக்கக் கூடாது? ஆனால் பள்ளிகளில் உள்ள அனைத்து கணிப்பொறி வேலைகளையும் செய்வது யார் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தெரியாமலா இருக்கின்றது? 16000 குடும்பங்களின் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுகிறார்கள். இவர்களின் வயிற்றில் அடிக்கும் அனைவரின் வாழ்க்கையும் நாசமாகப் போகட்டும். பகுதி நேர ஆசிரியர் வேலையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் அதிகப்படியான கல்வித் தகுதியில் பணியாற்றுபவர்கள் தான் என்பதை அரசிடம் கோரிக்கை வைப்பதை குறுக்கே புகுந்த கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  3. 15000 ரூபாய் இல்லாமல் இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் ஓடுவது மிகச் சிரமம்.

    ReplyDelete
  4. Intha aatchi kalvithuraiku avamaana sinnam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி