ஆசிரியர்களின் ஓய்வு வயது சலுகை - தடை விதித்த நீதிமன்றத்தின் ஆணை நகல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2020

ஆசிரியர்களின் ஓய்வு வயது சலுகை - தடை விதித்த நீதிமன்றத்தின் ஆணை நகல்!


சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிபட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு :


High Court Stay Order - Download here...


நான் 30.4.2020 - ல் ஓய்வுபெற வேண்டும் . எனக்கு 31.5.2020வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது . இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020 - ல் அரசாணை பிறப்பித்தது . இதனால் 31.5.2020 - ல் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பயன் பெறுவர் . என்னைப்போல் ஏப்ரல் 30 - ல் ஓய்வுபெற்று பணி நீட்டிப்புப் பெற்றவர்களுக்குப் பலனில்லை.

இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது . எனவே 31.5.2020 - ல் ஓய்வு  பெறும்ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும்வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020 - ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தர விடவேண்டும் . அதுவரை என்னை மே 31 - ல் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது .

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜவஹர் , விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர் , செம்பட்டி பார்வதி , திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர் .இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று விசாரித்தார் . மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் , ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய் வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை .

 மனுதாரர்களின் ஓய்வு வரம்பு மார்ச் , ஏப்ரல் மாதங்களாக இருப்பினும் , தற்போது வரை பணியில் உள்ளனர் . அப்படியிருக்கும்போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்குப் பொருந்தாது என்பது ஏற்க முடியாது என்றார்.அரசுத் தரப்பில் , பதில் அளிக்க  அவகாசம் கோரப்பட்டது . அப்போது குறுக்கிட்ட  அஜ்மல்கான் , ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது . இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களைப் பணியில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது .

 எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றார் . இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார் , அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3 - ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

6 comments:

  1. Bed. College ellam muttitu eppothu ullavagal sagum varai teacherra erungal,...elangar ellam thaniyar school than valkaiya.....

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒன்பது வருடங்களாக போராடும் போது இப்படிப்பட்டவர்கள் ஏன் குறுக்கே வருகிறார்கள்? இந்த ஆட்சியாளர்கள் இப்படி அருமையான வாரத்தில் மூன்று அரைநாள் மற்றும் 12 நாட்களுக்கு என்று மட்டும் ஒரு போஸ்ட் உருவாக்கி மற்ற நாட்களில் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படி இவர்கள் குடும்பம் நடத்துவார்கள் என்பது கூட தெரியாமல் இந்த சிறப்பான ஆசிரியர் பணியினைக் கொடுத்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் போட்ட இந்த வேலைக்கு எவ்வளவு போராட்டம் செய்தும் 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்றாமல் வெறும் 7700 கொடுக்கிறார்கள். அதிலும் மே மாதம் சம்பளம் கிடையாது. இந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளுமா யோசிக்கக் கூடாது? ஆனால் பள்ளிகளில் உள்ள அனைத்து கணிப்பொறி வேலைகளையும் செய்வது யார் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தெரியாமலா இருக்கின்றது? 16000 குடும்பங்களின் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுகிறார்கள். இவர்களின் வயிற்றில் அடிக்கும் அனைவரின் வாழ்க்கையும் நாசமாகப் போகட்டும். பகுதி நேர ஆசிரியர் வேலையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் அதிகப்படியான கல்வித் தகுதியில் பணியாற்றுபவர்கள் தான் என்பதை அரசிடம் கோரிக்கை வைப்பதை குறுக்கே புகுந்த கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பலமுறை பல வழிகளில் அரசின் கவனத்திற்க்கு சென்றாலும் ஒரு புரியோஜனமும் இல்லை.

      Delete
  3. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றோம். 2013 -ல் தேர்ச்சி பெற்று தற்போது சான்றிதழ் காலாவதியாகப் போகிறது. இடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் என்று மைக்கை நீட்டும்போதெல்லாம் கூறினார். ஆனால் நிரப்பப்படவே இல்லை இன்று வரை. இப்படி போட்டித் தேர்வுகளுக்கே படித்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? தேர்ச்சி பெற்று என்ன பிரயோஜனம்... 2013-ல் தேர்ச்சி பெற்று காலாவதியாகப் போகிறது சான்றிதழ். கல்வித்துறை கைவிட்டு விட்டதா....

    ReplyDelete
  4. இப்படி புலம்பிக்கிட்டே வீட்ல இருந்தா சரியா?நேர முதல்வர பார்க்க முயற்சி செய்யுங்கநல்லாேசக் கூடிய உங்களின் பாதிப்புகளை தெளிவாக எடுத்து கூறகூடிய நபரை அனழத்து சென்றுேசுங்கள் உடனே ஏற்பாடு செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. S udane retirement age 59 cancel panna poraduvom

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி