கொரோனா விளைவு - அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்! - kalviseithi

May 21, 2020

கொரோனா விளைவு - அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்!2019 டிசம்பர் இறுதிநாள் வூஹானில் கொரோனாவாம் என்று செய்திகளில் படித்து கடந்து சென்ற யாரும், கொரோனா நமது தெருவிலும் கட்டையப்போட்டு வழிமறிக்கும் என நினைத்திருக்க மாட்டோம்.

கண்ணுக்குத் தெரியாத வைரஸ் அனைத்துத் தொழில்களையும் புரட்டிப் போட்டது போல் ஆண்டுக்கு பலகோடிகளில் புரளும் கல்வித் தந்தைகளின் தனியார் பள்ளி தொழிலையும் கடுமையாக பாதித்தது.

தனியார் பள்ளிகளின் பதினோராம் வகுப்பு அட்மிசனுக்காகவே பத்தாம் வகுப்புத் தேர்வை கொரோனாவோடு எழுதவேண்டும் என்று அவசரப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

மக்களின் வருமானம் அடியோடு சரிந்ததால் தனியார் பள்ளிக்கு கடன வாங்கியாவது மஞ்சள் நிற வாகனத்தில் அனுப்பிய பெற்றோர்கள் இந்த ஆண்டு அரசுப்பள்ளியை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையெல்லாம் கணக்குப்போட்டு கூட்டிக்கழித்துப் பார்த்த கல்வித் தந்தைகள் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவித்துள்ளனர்.

கட்டண உயர்வு இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதை தடுக்க இயலாது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து ஆசிரியர்கள் வேலைவாய்ப்புப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை நுழைவுத்தேர்வு எழுதவைத்து தனியார் பள்ளிகள் இலவசக்கல்வி அளிப்பது, உசேன் போல்ட்டுகளை பொறுக்கி எடுத்து ஓடவைப்பது போலாகும். எனவே பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி அரசுப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும்.

21 comments:

 1. மக்களின் வருமானம் அடியோடு சரிந்ததால் தனியார் பள்ளிக்கு கடன வாங்கி செலுத்த விருமபவில்லை ......ஆகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும் .........இந்த நிலையை பயன்படுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் ...........அவ்வாறு இல்லாமல் அமைதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து தற்போது நிகழும் பணி நிரவல் ,,,மாவட்ட மாறுதல் போன்றவற்றை தவிர்க்க இயலும் ...............விழித்து எழு .....விரைவாக மாணவர்களை பள்ளியில் சேருங்கள் ..............

  ReplyDelete
  Replies
  1. Deva
   May 21, 2020 at 7:13 PM
   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களின் வருமானம் குறைவுயில்லை அவர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிக்கு சேர்க்கை அதிரிக்கும்

   Delete
 2. some school teachers are not interested to make new admission,,,,because they said that their school strenth is 40+ so ...we need not face deployment.....like so many theories teachers having.........

  ReplyDelete
 3. i think who tell like this "Chance kuraivu",,,he may be a government school teachers....

  ReplyDelete
 4. No I am not a government school teacher...I am B.Ed.degree holder and working in a Pvt company....I told like that because parents are well-known about the infrastructure of govt school and administration of school education department.... teacher are working hard but they are appreciate the plans and programme is DSE....

  ReplyDelete
  Replies
  1. Yes..pin thangiya mavatangalil ovuru arasu paligalin adipadai vasathiya paarthal..kaneer thanaaga varum.. aasiriyargaluku adipadai vasathi oralavuku ulathu..aanal manavagalin nilamai koduram..

   Delete
 5. But they are not appreciate the plans and programme of DSE

  ReplyDelete
 6. 2013 posting potunga sir please

  ReplyDelete
  Replies
  1. 13000 posting pottaangale .. ungaluku poda maranthuttaangalaa??

   Delete
  2. Un known antha post bt asst..sgt pedals atha kekarraru

   Delete
 7. தனியார் பள்ளிகளில் அப்படி ஒன்று சிறப்பான கல்வியோ மணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் கற்பித்தல் இல்லை. இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Yes..as a govt teacher..I accept that..aanal ela govt schoolkalin pta members correcta irukaanganu thapu kanaku podatheenga...apadipata paligalin manavargal adipadai vasathi zero..unmaiyagathaan..ela palikalilum sola vilai..5 - 10 schools in an union.

   Delete
 8. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களின் வருமானம் குறைவுயில்லை அவர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிக்கு சேர்க்கை அதிரிக்கும்.

  ReplyDelete
 9. 500 பேர் எழுதும் தனியார் பள்ளியில் 4 பேர் டாக்டர்
  10பேர் சிறந்த பொறியியல் கல்லூரி
  மீதமுள்ள 486 என்ன ஆனார் என்பதை யோசிப்பது இல்லை.

  ReplyDelete
 10. government school teachers give the best education for the poor.....govt school teachers will do the best from their side....dont compare the private schools....

  ReplyDelete
 11. Government schools students sports la semma efficient irukanga,,,,,so avangaluku support panna PET posting podunga sir,,,,,,government school students running semma a pandranga ,,,,nan oru nal collector ground la parthen

  ReplyDelete
 12. அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டுமானால் இங்கு கொரேனா வரரேண்டும். அந்த லட்சணத்தில் இருக்கிறது நமது அரசாங்கம் கல்வித்துறையை நடத்தும் லட்சணம். அரசு மருத்துவர்கள் சாயங்காலம் ஆனால் தனியே கிளினிக் வைத்துக்கொள்வது போல அரசுப்பள்ளி ஆசிரியர்களும் சாயங்காலம் ஆனால் தனியே கல்வி கிளினிக் வைத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு அது கிளினிக், சிலருக்கு அது முதல் ேபாட்டு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை. அரசு இதைக் கண்டு கொள்வதில்லை. கல்வி முழுவதையுமே தனியார் மயமாக்க அரசு மேற்கொள்ளும் உத்தியோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இதை எந்த நீதி மானம் கல்வி அரசனும் கண்டுகொள்வதில்லை. கண்டும் காணாமல் இருக்கிறார்களோ என்னவோ. தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா ?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி