EMIS - U DISE + படிவத்தில் ஆசிரியர்கள், BRTEs மற்றும் BEOs மேற்கொள்ள வேண்டிய பணிகள்!. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2020

EMIS - U DISE + படிவத்தில் ஆசிரியர்கள், BRTEs மற்றும் BEOs மேற்கொள்ள வேண்டிய பணிகள்!.

அனைத்து வகை பள்ளிகள் சார்பான விவரங்கள் EMIS login- ல் U DISE + படிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி சார்பான விவரங்களில் விடுபட்ட விவரங்களை பதிவேற்றம் செய்யவும் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சரிபார்க்கவும் தற்போது இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கீழ்காண் அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் இப்பணியினை பிழைகளின்றி முழுமையாக முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: - 

பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடம் மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 Teacher's Profile அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 CWSN குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

RTE குழந்தைகளின் விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 தேர்ச்சி விவரம் , Vocational Students Details Vocational Instructor விவரம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

School Profile- யை பதிவிறக்கம் செய்ய வேண்டும் ,  பதிவேற்றம் செய்துள்ள அனைத்தும் சரியாக பதிவிறக்கத்தில் வந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை தலைமையாசிரியர் Certify செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் தலைமையாசிரியர் ONLINE யில் செய்திட வேண்டும்.

ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் : 

27.05.2020 க்குள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியினை சரிபார்த்து Certify செய்துள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.

School Profile -யை Download செய்து அதில் School Profile Details- யில் வரும் ( Block Category , Type , Management Constituency etc ) aflura 2.sg என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளியில் பதிவேற்றம் செய்துள்ள Buliding , Teacher Profile , Students Profile சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களிடம் தகவல் தெரிவித்து உடனடியாக சரிசெய்யுமாறு வழிகாட்டுதல் அவசியம்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் BRTE / BEO Certify செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி