விடைத்தாள் கட்டுகளை பாதுகாப்பாக திருத்த மையங்களுக்கு மாற்ற உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

விடைத்தாள் கட்டுகளை பாதுகாப்பாக திருத்த மையங்களுக்கு மாற்ற உத்தரவு


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக, விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையங்களுக்கு அனுப்ப, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து விட்டன. பிளஸ் 1ல், ஒரு பாடத்துக்கு மட்டும், தேர்வு நடத்த வேண்டி உள்ளது.

தேர்வு முடிந்த பாடங்களுக்கான விடைத்தாள்கள், ஒவ்வொரு மாவட்டங்களிலும், சில பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.இந்த பள்ளிகள் கட்டுக்காப்பு மையங்களாக நிர்ணயிக்கப்பட்டு, கேமரா கண்காணிப்பு மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இங்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில், ஆசிரியர்கள், பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் உள்ளனர்.விடைத்தாள் திருத்தும் பணிகளை துவங்க, அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும், 27 முதல், விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. இதற்கானமுன்னேற்பாடு துவங்கிஉள்ளது.

ஒவ்வொரு கட்டுக்காப்பு மையங்களில் இருந்தும், விடைத்தாள்கள், விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளன.வரும், 19 முதல், போலீஸ்பாதுகாப்புடன் விடைத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டு, விடை திருத்தும் மையங்களில் வைக்கப்பட உள்ளன.அங்கு விடைத்தாள்கள் கலைக்கப்பட்டு, யாருடைய விடைத்தாள்கள் எங்கே உள்ளன என, அடையாளம் தெரியாத வகையில், அவற்றை கையாள, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி