கட்டாயத் தேர்ச்சி உத்தரவை மீறினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2020

கட்டாயத் தேர்ச்சி உத்தரவை மீறினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை


1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் அனைத்துவித பள்ளிகளுக்கும் விடுமுறை தரப்பட்டது. மேலும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கிடையே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும் ஏற் கெனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கப்படும் என்றும் பெற்றோர்களுக்கு சில தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு அரசின் ஆணையினை மீறி செயல்படும் பள்ளிகள் மீதுஉரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து தனியார்பள்ளிகளுக்கும் இதுதொடர்பான சுற்றறிக்கையை அனுப்பி அறிவுறுத்தல் வழங்க வேண்டும். மேலும், அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கும் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி