பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2020

பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்!


தமிழகத்தில் கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன் தெரிவித்தார் .

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிரு பர்களிடம் கூறியதாவது : கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை . கொரோனா தொற்று கட் டுப்பாட்டிற்குள் வந்தவு டன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள் ளப்படும் .

அதன் அடிப்ப டையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப் பார் . 2 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லை னில் பயிற்சி அளித்து வரு கின்றனர் .

நாளை மறுதி னம் ஆடிட்டர் தேர்வுக்கு ஆன்லைனில் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது . பத்தாம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் . கொரோனா நோய் தொற்றுக்கு தீர்வுகாணப்பட்டவுடன் மருத்துவக்குழுவினர் ஆலோசனையின்பேரில் உயர்மட்டக் குழு வின் பரிந்துரையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் .

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார் .

2 comments:

  1. Appp 2022 la thaan school open aagum... Paithiyam corono noi payriya entha purithalum illatha amaichar..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி