அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடந்த ஓர் ஆண்டாக கற்பித்த பாடங்களை வாட்ஸ்அப் வீடியோக்கள் மூலம் நினைவூட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கரோனா ஊரடங்கால் அங்கன் வாடி மையங்கள் மூடப்பட்டுள் ளன. இருப்பினும், குழந்தைகளின் படிக்கும் திறன் தடைப்படாமல் இருக்க வாட்ஸ் அப் வீடியோக்கள் மூலம் பாடம் கற்கும் புதிய முறையை அங்கன்வாடி பணியா ளர்கள் கடந்த மாதம் தொடங்கினர்.இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பாக, ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அங்கன்வாடி மையங்கள் திறந் திருக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கடந்த ஓர் ஆண்டில் கற்பித்த பாடங்களை குழந்தைகளுக்கு நினைவூட்டுவது வழக்கம்.தற்போது மையங்கள் மூடப் பட்டுள்ளதால் வாட்ஸ் அப் வீடியோக்கள் மூலம் இதை செயல்படுத்தி வருகிறோம்.
பெற்றோர் மற்றும் குழந்தைகள் மத்தியில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மற்றும் குழுக்களில் பகிரப்படும் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்றதும், நினைவூட் டல் வகுப்புகளை எடுப்பதற்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி