தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு : பாட அளவை குறைக்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2020

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு : பாட அளவை குறைக்க திட்டம்

கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காலதாமதத்தின் காரணமாக வழக்கமாக பாடங்களை நடத்தி முடித்து உரிய காலத்தில் தேர்வுகள் வைக்கும் நடைமுறை வரும் கல்வியாண்டில் சவாலானதாக இருக்கும்.

இத்தகைய சூழலில் தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை கடைபிடிக்கப்பட்டு வரும் முப்பருவ முறையில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ பாடமுறையில் 1 பருவ பாடத்தை கைவிடுவது என பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கனவே புதிய பாடத்திட்ட அடிப்படையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடச் சுமை அதிகமாக இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர் குறைக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்.இந்த சூழலில் குறுகிய நாட்களுக்குள் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டி உள்ளதால் முழுமையாக பாடங்களை நடத்தி முடிப்பது பெரும் சிரமம். இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்கத்தால் தற்போது பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஏற்ப்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. முழு பாடத்திட்டத்தையும் (full syllabus ) படித்து கூட தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு DOCTOR படிப்பு என்பது கனவாகவே உள்ளது ........SYLLABUS குறைத்தால் வரும் ஒன்று அல்ல்து இரண்டு MBBS DOCTOR சீட்டும் கிடைப்பது கடினமே ............NEEET தேர்வை எதிர்கொள்வது சிரமமே ........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி