அறிவியல் உண்மை - கல்லுக்குள் தேரை எப்படி வருகிறது? அதற்கு உணவு எவ்வாறு கிடைக்கிறது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2020

அறிவியல் உண்மை - கல்லுக்குள் தேரை எப்படி வருகிறது? அதற்கு உணவு எவ்வாறு கிடைக்கிறது?


" கல்லுக்குள் தேரை " என்பது பழக்கமான சொற்றொடர் என்றாலம் கல்லிடைத் தேரை என்பதுதான் சரியான சொற்றொடர் ஆகும். தவளையைப் போன்ற தேரையும் இருவாழ்வி வகையைச் சார்ந்தது. தேரை ஒரு குளிர் ரத்தப் பிராணி ஆகும். இனப்பெருக்க காலமான மழைக் காலத்தில்தான் வெளிப்படும். மற்ற காலங்களில் பூமிக்கடியில் ஈரமான சூழ்நிலையில் எல்லாவிதமான செயல்களையும் முடக்கி ஒருவித உறக்க நிலையில் இருக்கும்.

அப்போது, குறைந்தபட்ச சுவாசம் தோல் மூலம் நடைபெறும். பொதுவாக தேரைகள், பூமிக்கடியில் உள்ள பொந்துகளிலும் கற்களுக்கு இடையேயும் உறக்க நிலையை மேற்கொள்ளும்.

எப்போதாகிலும் கற்களைப் புரட்டும் போதும் அல்லது கற்களை உடைக்கும் போதும் இந்த உறக்க நிலையிலுள்ள தேரைகள் வெளிப்படும். அதனால்தான் 'கல்லுக்குள் தேரை' என்ற சொற்றொடர் உருவாகி இருக்கிறது. ' கல்லிடைத் தேரை ' என்பதுதான் சரியான பயன்பாடு.

தேரை இவ்விதம் உறக்க நிலையில் இருக்கும்போது தன் தசைகளில்,  கல்லீரலில் சேமித்து வைத்துள்ள ( க்ளைக்கோஜன்) உணவுப் பொருளை ஆற்றல் உற்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி