ஓய்வுபெறும் வயது உயர்வு - எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

ஓய்வுபெறும் வயது உயர்வு - எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!


உயர் நீதிமன்றத்தில் சென்னை திருநகரை சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் தாக்கல் செய்த மனுவில் , " இந்த மாதம் ( மே ) 31 ம் தேதி யிலோ அதற்கு முன்போ ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டு உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது . இதனால் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக அதிகரித்துள்ளது .

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 ஆயிரம் அரசு ஊழி யர்கள் ஓய்வு பெறுகிறார்கள் இந்த பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் . அரசின் அறிவிப்பால் இளைஞர்களின் ஒரு ஆண்டுகால எதிர்பார்ப்பு வீணாகி விடும்
அரசு பணிக்கு  அதிக பட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 34 மற்றும் 35 வயதில் உள்ள இளைஞர்க ளின் வேலை வாய்ப்பு முழுவதுமாக பறி போய்விடும் .

எனவே , அரசு பணிக்கான வயது வரம்பை ஒரு ஆண்டு நீட்டிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ் வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது . இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் , அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் , மனுதாரர் பாதிக்கப் பட்ட நபர் அல்ல . அரசுப் பணிகள் தொடர்பான விவகாரங்களை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி