10ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை - இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

10ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை - இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - கல்வித்துறை அறிவிப்பு


தேர்வு தொடர்பாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக, கவுன்சிலிங் வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பிரச்னையால், தள்ளி வைக்கப்பட்ட, 10ம் வகுப்பு பொது தேர்வு, ஜூன், 1ம் தேதி முதல், 12 வரை நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு, அவரவர் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக, பஸ் வசதி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு பயத்தில் உள்ள மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக, கவுன்சிலிங் வழங்கி, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வழியாகவும், கவுன்சிலிங் அளித்து, தேர்வுக்கு தயார்படுத்துமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

தேர்வு தொடர்பான ஆலோசனைகளுக்கு , 14417 என்ற, தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி