நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மீண்டும் அவகாசம்! - kalviseithi

May 16, 2020

நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மீண்டும் அவகாசம்!


நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் வரும் மே 31-ஆம் தேதி வரை  இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். தோ்வு மையங்களையும் மாற்றிக் கொள்ளலாம்.

இதுவே இறுதிவாய்ப்பு என்பதால் மாணவா்கள் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். தினமும் மாலை 5 மணி வரை மட்டுமே திருத்தங்களை செய்ய முடியும். தோ்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. We need a questions to practice for biology,chemistry,physics from NTA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி