ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு; தமிழக அரசை கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2020

ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு; தமிழக அரசை கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!


ஓய்வூதிய வயதை அதிகரித்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசை கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதால் ஏற்பட்டுள்ள அசாதாராண சூழ்நிலையில், தமிழக அரசு மத்திய அரசிடம் கொரோனா நிவாரண நிதியை கேட்டுப்பெற தைரியமில்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் உரிமைகளில், அவர்கள் போராடி பெற்ற சலுகைகளில் அடுத்தடுத்து கை வைக்க தமிழக அரசு ஆரம்பித்தது. அதன் முதற்கட்டமாக ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலத்திற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி மத்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பை ஒட்டி தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வை ஜூலை 2021 வரை நிறுத்தியுள்ளது.

இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என அனைத்து அரசு ஊழியர்களின் பணத்திலிருந்து சுமார் ரூ.15,000 கோடியை எந்தவித நியாயப்படுத்தலும் இன்றி பிடுங்கிக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடான இன்னொரு செயலையும் தமிழக அரசு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியர்களும் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் அறிய நேர்ந்துள்ளது. இதுநாள் வரை மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிவாரணத் தொகையை பற்றி அறிவிப்புகள் எதுவும் கொடுக்காத நிலையில் அதை பெறுவதற்காக குறைந்தபட்சம் தமிழகத்தில் அனைவரும் சேர்ந்து குரலெழுப்பக்கூட முன் வராமல், ஈட்டிய விடுப்பின் 15 அல்லது 30 நாட்களை சரண்டர் செய்து தொகைபெறும் உரிமையை ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெறுவதை நிறுத்தியிருப்பதை வெட்கக்கேடு என்று சொல்லாமல் என்னவென்பது?
இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2300 கோடி வரை பண இழப்பு ஏற்படுத்தியது.

இதற்கும் மேலாக தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஜிபிஎப் தொகையின் வட்டி விகிதத்தை 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைத்து அரசு ஊழியர்களுக்கு கொரோனா அதிர்ச்சியைவிட பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியின் மூலம் பெறும் வட்டி விகிதத்தில் 0.8 சதவீதம் இழக்க நேரிட்டது. தற்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 என்பதிலிருந்து 59 என உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள எந்தவொரு அரசு ஊழியர் ஆசிரியர்- அமைப்பும் குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தமிழக அரசிடம் ஓய்வுபெறும் வயதை உயர்த்தச் சொல்லி கோரிக்கை வைக்கவில்லை. இந்த நடவடிக்கையானது எந்தவகையிலும் மாநில அரசின் நிதி நிலையினை மேம்படுத்தாது என்பதோடு மட்டுமல்லாமல், ஓராண்டிற்கு தற்போது வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களைத் தள்ளிப் போடுவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதுதான் யதார்த்தம்.

மேலும், பதவி உயர்வினை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்தப் போக்கானது, அரசு ஊழியர் ஆசிரியர் என்ற சமூகத்தினையும் தாண்டி, தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி என்ற கனவினை முற்றிலுமாக ஓராண்டிற்கு முடக்கும் நடவடிக்கை என்பதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓராண்டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையினை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையானது, 2003ஆம் ஆண்டு தமிழக அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி, ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு தடை விதித்ததைப்போல், ஓராண்டிற்கு அரசுப் பணிகளுக்கு தடை என்ற ஒரு நிலையினை தமிழக அரசு மறைமுகமாக உருவாக்கி உள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதி சேஷய்யா அவர்கள் தலைமையில் காலிப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு குழுவினை அரசாணை 56ன் கீழ் அமைத்து, அந்தக் குழு தமிழக அரசிடம் அறிக்கையினை அளித்து, அதற்கான பணியினை தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டுள்ளது.  தற்போது ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது, காலிப் பணியிடங்களை மொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் செய்வதற்கான வழிகளை மேற்கொள்வதற்கான காலஅவகாசமாக எண்ண வேண்டியுள்ளது.  இதன்மூலம் இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின்மூலம் பாதுகாக்கப்பட்டுவரும் சமூக நீதி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், மே 2020 மு

18 comments:

  1. Down down தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

    ReplyDelete
  2. ஏற்கனவே போராட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்பட்டது.இப்போ அடுத்த போராட்டத்தில் குதிக்க போனாங்க.

    ReplyDelete
  3. வேண்டுமென்றால் அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளவும் ஏன் இந்த கபட நாடகம்

    ReplyDelete
    Replies
    1. இது தான் சரி. நீட்டிக்கப்பட கூடாது என்று சொல்ல சங்கங்களுக்கு உரிமை இல்லை

      Delete
    2. இது தூண்டப்பட்ட நாடகம். நீங்கள் எல்லாம் இப்போதே எழுதிக்கொடுத்துவிட்டு சென்றால் பல பேருக்கு நல்லது. நீங்கள் நல்லது செய்ய கூடியவர்கள் போல தெரியவில்லை.

      Delete
  4. 59 வயது என்பது உண்மையில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மற்றவர்களும் விருமப்பம்தான்.

    ReplyDelete
    Replies
    1. உன் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதாது. மற்ற ஏழை குடும்ப பட்டதாரியை நினைத்து பேசுங்கள்... 58 வயது வரை சம்பாதித்தாலும் உங்கள் பேராசை அடங்காதா.....

      Delete
    2. நாற்பது வயது நாற்பத்தைந்து வயதில் வேலைக்கு சேர்ந்தவனுக்கு ஒரு வாய்ப்பு

      Delete
    3. நாற்பது வயது நாற்பத்தைந்து வயதில் வேலைக்கு சேர்ந்தவனுக்கு ஒரு வாய்ப்பு

      Delete
  5. இந்த‌ அர‌சாணை இளைஞ‌ர்க‌ளின் வேலைவாய்ப்பு
    க‌ன‌வைப் ப‌றிக்கும்...அர‌சு உட‌னே இர‌த்து செய்ய‌ வேண்டும்...30 வ‌ருட‌ம் நிறைவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு கட்டாய‌ ஓய்வு அளிக்க‌லாம்..

    ReplyDelete
  6. 59 வயது என்பது உண்மையில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மற்றவர்களும் விருமப்பம்தான்.வேண்டுமென்றால் அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.30 வ‌ருட‌ம் நிறைவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு கட்டாய‌ ஓய்வு அளிக்க‌லாம்..

    ReplyDelete
    Replies
    1. 25 வருடம் பணி நிறைவு செய்தாலும் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்....

      Delete
  7. அர‌சு ஊழிய‌ர்க‌ள் சுய‌ந‌ல‌மில்லாம‌ல் சிந்திக்க‌ வேண்டும்...இந்த‌ அர‌சாணையை நிச்ச‌ய‌ம் இர‌த்து செய்ய‌ வேண்டும்..இளைஞ‌ர்க‌ள் தொட‌ர்ந்து குர‌ல் கொடுக்க‌ வேண்டும்..58 வ‌ய‌து அல்ல‌து 28 வ‌ருட‌ ப‌ணி நிறைவு செய்திருந்தால் அவ‌ர்க‌ளாக‌வே விருப்ப‌ ஓய்வு பெற‌லாம்..அல்ல‌து அர‌சே க‌ட்டாய‌ ஓய்வு அளிக்க‌லாம்..ஓய்வு பெற்றால் வ‌ழ‌ங்கும் தொகையைத் த‌விர்க்க‌வே அர‌சு இந்த‌ த‌வ‌றான‌ முடிவை எடுத்துள்ள‌து..தொகையை த‌வ‌ணைக‌ளாக‌ கூட‌ வ‌ழ‌ங்க‌லாம்..ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கை நியாய‌ம‌ன‌தே..

    ReplyDelete
  8. இனி ஜாக்டோ ஜியோ வேண்டுமா? தேவையான கோரிக்கையை வலியுறுத்தி பெற்றுத்தர முடியவில்லை.தானாக ஏதாவது நடந்தால் குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு

    ReplyDelete
  9. இது வரை எந்த அரசாணையும் திரும்ப பெற்றுக் கொண்டதாக சரித்திரம் இல்லை...

    ReplyDelete
  10. 30 வயதில் கட்டாய ஓய்வு கொடுத்தால் நான் பணிபுரியும் பள்ளியில் பாதி ஆசிரியர்கள் வீட்டுக்கு போய் விடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. 30 vayadhu illai.. 30 aandugal Pani niraivu

      Delete
  11. போராட்டத்தினால் எந்த ‌பயனும் இல்லை. சும்மா இருந்தாலே அரசே வாபஸ் வாங்கிடும்.இல்லன்னா திருத்தம் செஞ்சிடும்.
    ஏற்கனவே உபரி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. இதில் இளைஞர்கள் கனவு பலிப்பதும் சந்தேகமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி