விடைத்தாள் திருத்தும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

விடைத்தாள் திருத்தும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்!


அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணிகளும் , மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது . தற்போது மாற்றியமைக்கப்பட்ட முகாம் பணிக்கான அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . முகாம் பணிக்கான அட்டவணையையும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளையும் முகாம் அலுவலர்கள் பின்பற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் .

* மதிப்பீட்டு முகாம்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை ( Social Distance ) பின்பற்றும் பொருட்டு , ஒரு அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் ( CE ) , ஒரு கூர்ந்தாய்வாளர் ( SO ) மற்றும் ஆறு ( 6 ) உதவித் தேர்வாளர்கள் ( AE ) என மொத்தம் 8 நபர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

* இந்நடைமுறை பின்பற்றப்படும்போது முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கனவே கூடுதலாக தேவைப்படும் அறைகள் கணக்கிடப்பட்டு மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளிலும் மதிப்பீட்டு முகாம் பணிகளை மேற்கொள்ளலாம் என தெரித்துக் கொள்ளப்படுகிறது . அவ்வாறு கூடுதலாக வேறு பள்ளிகளில் மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் பட்சத்தில் அவ்விடங்களிலும் பணி நடைபெறும் நாட்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

* ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட மதிப்பீட்டு மையங்கள் முதன்மை மதிப்பீட்டு மையமாகவும் , தற்போது கூடுதலாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பள்ளிகள் துணை மதிப்பீட்டு மையங்களாகவும் செயல்பட வேண்டும் .

* முதன்மை மற்றும் துணை மதிப்பீட்டு மையங்களில் கொரோனா - வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை ( Social Distance ) பின்பற்றும் பொருட்டு , தேர்வாளர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு அறையிலும் மதிப்பீடு செய்யப்படவேண்டிய விடைத்தாள் கட்டுக்களை முதன்மை தேர்வாளரிடம் சென்று வழங்கவேண்டும் .

* ஒரே பாடத்திற்கான விடைத்தாட்களை முதன்மைக் மற்றும் துணை மதிப்பீட்டு மையத்திற்கு மதிப்பீடு செய்யும் வகையில் பிரித்து வழங்கப்படக் கூடாது .

* ஒவ்வொரு நாளும் அரசு வாகனம் மூலம் மட்டுமே துணை மதிப்பீட்டு மையத்திற்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டிய விடைத்தாட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் .

* ஒவ்வொரு நாள் மாலையிலும் துணை மதிப்பீட்டு மையத்தில் மதிப்பீடு செய்யம்பணி நிறைவடைந்தாலோ அல்லது நிலுவையில் இருந்தாலோ அனைத்து விடைத்தாட்களையும் பாடவாரியாக கட்டி முதன்மை மதிப்பீட்டு மையத்திற்கே அரசு வாகனம் மூலம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் .

* துணை மதிப்பீட்டு மையத்தில் மதிப்பீடு செய்யம் பணியினை மேற்பார்வையிட தொடர்பு அலுவலராக தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் மூத்த தலைமை ஆசிரியர் / முதுநிலை ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்திட வேண்டும் .

* மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் ( MVO ) சமூக இடைவெளியினை கடைபிடித்து தேர்வாளர்களிடமிருந்து திருத்திய விடைத்தாட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் .

* மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி ( Data Entry ) முதன்மை மதிப்பீட்டு மையத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் .
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீட்டு பணி நடைபெறும் நாட்களில் மையங்களிலுள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் என அனைத்து இடங்களிலும் பணி துவங்குவதற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக கிருமி நாசினி தெளித்திட முகாம் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

* மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மையத்திற்கு வருகை புரியும்போது அனைவரும் தங்களது கைகளை சோப்பு / Hand Sanitizer கொண்டு சுத்தம் செய்வதற்கு ஏதுவாக சோப்பு மற்றும் Hand Sanitizer ஆகியவை முகாம்களில் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

* முகாம் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் . முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு முகக்கவசம் வழங்கிடுவதற்கும் முகாம் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட முகாம் அலுவலர்கள் தேர்வுத் துறையால் வழங்கப்படும் அறிவுரைகளை உரிய முறையில் பின்பற்றுகிறார்களா என்பதனை ஆய்வு செய்து உறுதி செய்துக் கொள்ளுமாறும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் முகாம் அலுவலர்களும் இணைந்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியினை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் பின்னர் அனுப்பி வைக்கப்படும் .

2 comments:

  1. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 329 வேதியியல் ஆசிரியர்கள்

    தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 12.06.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது அக்டோபர் மாதம் 20 - ஆம் தேதி வெளியிட்டது.பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது பாடவாரியாக நவம்பர் 20 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதில் வேதியியல் தெரிவுப் பட்டியலில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக வேதியியல் பாடம் தவிர்த்து ஏனைய பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 14 பாடங்களை சேர்ந்த சுமார் 1503 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையானது வழங்கப்பட்டது.ஆனால் வழக்குகள் காரணமாக வேதியியல் பாடப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 329 முதுகலை ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடைபெறவில்லை.வேதியியல் பாடத்திற்கான தெரிவு பட்டியலைப் போன்றே தயாரிக்கப்பட்ட தமிழ் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வேதியியல் பாட ஆசிரியர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனைர்.இதனால் ஒரு சிலர் தொடர்ந்த வழக்குகள் காரணமாக ஏனைய நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.அரசு மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேதியியல் ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை வேதியியல் ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் கல்வியாண்டு தொடக்கத்திலாவது 2019 - ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Sir,

      Kalviseithi avlo worth kidayaathu.. So dont post your grievences here..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி