SSLC, 11th , 12th TT - Public Exam 2020 - New Time Table DGE Official Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

SSLC, 11th , 12th TT - Public Exam 2020 - New Time Table DGE Official Published


21.03.2020 தேதியிட்ட தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி , கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஏற்கனவே , 27.03.2020 முதல் 13.04.2020 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் | ஏப்ரல் 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகளான வேதியியல் , கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது .

மேலும் , 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளான வேதியியல் , கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுத இயலாத தேர்வர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது . தற்போது ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதாத தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . இக்கால அட்டவணைகளை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி