அறிவியல் உண்மை - குளிர்ந்த பானங்கள் அருந்துவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியுமா? - kalviseithi

May 6, 2020

அறிவியல் உண்மை - குளிர்ந்த பானங்கள் அருந்துவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியுமா?


முடியாது. நம் உடலின் வெப்பநிலை 36.8°C , 50 கிலோ எடை கொண்ட ஒருவர் , தன் உடல் வெப்பநிலையை விட 20°C குறைவான குளிர்பானம் 300 மில்லி லிட்டர் அருந்துவதாகக் கொள்வோம். இதனால் சராசரியாக அவர் வெப்பநிலை 0.1°C தான் குறையும். உயிரோட்டமுள்ள நம் உடலுக்கு இந்த மாதிரியான சராசரி கணக்குப் போடக் கூடாது. குளிர்பானம் அருந்துவதால் தாகம் தணிகிறது.

உடலிலுள்ள நீரானது , வெப்பநிலை உயரும்போது அதிக அளவில் ஆவியாகிறது. அதை ஈடு கட்டுவதற்கான நீர் , குளிர்பானம் மூலமாக உடலுக்குக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான உப்புச் சத்துக்கள் வியர்வையின் மூலமாக வெளியேறும்போது அதை கட்டுப்படுத்துவற்கான உப்புகளும் , உடல் ஆற்றலுக்குத் தேவையான சர்க்கரையும் குளிர்பானத்தின் மூலம் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி