ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது நீட்டிப்பால் இளைஞர்களில் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் - ஜாக்டோஜியோ கண்டனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2020

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது நீட்டிப்பால் இளைஞர்களில் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் - ஜாக்டோஜியோ கண்டனம்!


கொாரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் , மாநில அரசின் நிதி நெடுக்கடியினைக் காரணம் காட்டி ஏற்கனவே தமிழக அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் சரண் விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு , வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு போன்ற ஆசிரியர் - அரசு ஊழியர் விரோத நடவடிக்கையினை மேற்கொண்டது . தற்போது அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 என்பதிலிருந்து 59 என உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் . இந்த நடவடிக்கையானது எந்தவகையிலும் மாநில அரசின் நிதி நிலையினை மேம்படுத்தாது என்பதோடு மட்டுமல்லாமல் , ஓராண்டிற்கு தற்போது வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களைத் தள்ளிப் போடுவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதுதான் யதார்த்தம் . மேலும் , பதவி உயர்வினை எதிர்நோக்கியுள்ள காத்திருக்கும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . தமிழக அரசின் இந்தப் போக்கானது , ஆசிரியர் - அரசு ஊழியர் என்ற சமூகத்தினையும் தாண்டி , தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி என்ற கனவினை முற்றிலுமாக ஓராண்டிற்கு முடக்கும் நடவடிக்கை என்பதோடு , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓராண்டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையினை உருவாக்கி உள்ளது . இந்த நடவடிக்கையானது , 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி , ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு தடை விதித்ததைப்போல் , ஓராண்டிற்கு அரசுப் பணிகளுக்கு தடை என்ற ஒரு நிலையினை தமிழக அரசு மறைமுகமாக உருவாக்கி உள்ளது .

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதி சேஷய்யா அவர்கள் தலைமையில் காலிப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு குழுவினை அரசாணை 56ன் கீழ் அமைத்து , அந்தக் குழு தமிழக அரசிடம் அறிக்கையினை அளித்து , அதற்கான பணியினை தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டுள்ளது . தற்போது ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது , காலிப் பணியிடங்களை மொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் செய்வதற்கான வழிகளை மேற்கொள்வதற்கான கால அவகாசமாக எண்ண வேண்டியுள்ளது . இதன்மூலம் இந்தியாவிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்மூலம் பாதுகாக்கப்பட்டுவரும் சமூக நீதி என்பது கேள்விக்குறியாகி உள்ளது . இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காத்திடும் வகையிலும் ஆசிரியர் - அரசு ஊழியர் பதவி உயர்வினை பாதுகாக்கும் வகையிலும் , ஆசிரியர் - அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதினை ஏற்கனவே உள்ள 58 வயது என நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ கேட்டுக் கொள்கிறது.


35 comments:

  1. Oru e, kakka kooda varathu, intha jacto neo va nambi, Ivanungala thala than, new appointments spoiled

    ReplyDelete
    Replies
    1. 25 வருடம் பணி நிறைவு செய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்

      Delete
  2. Epadiyaavathu intha GO i cancel panna vakkanum...

    ReplyDelete
    Replies
    1. GO கண்டிப்பாக அமுல்படுத்தபடும்
      திறமை உள்ளவர்களுக்கு வேலை
      கண்டிப்பாக கிடைக்கும்

      Delete
  3. இளைஞர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று உண்மையில் நினைத்தால் ஓரளவு நல்ல வசதியான நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் முன் ஓய்வு பெற்று இளைஞர் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Appo neenga 59 varai work panna paakaringalaaa...

      Delete
    2. கண்டிப்பாக. ஒய்வு பெறும் வயது 60ஆக நீட்டிக்கும்.பல மாநிலங்களில் ஒய்வு பெறும் வயது 60ஆக உள்ளது 65வயதில்
      ஒய்வு பெறும் பதவியும் உள்ளது

      Delete
    3. கண்டிப்பாக .. இது வரை எந்த அரசாணையும் திரும்ப பெற பட்டதில்லை.இது தான் நடக்கும்..எரியிறவன் வயித்துல எரிவாயு உற்பத்தி ஆகும்

      Delete
  4. இளைஞர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று உண்மையில் நினைத்தால் ஓரளவு நல்ல வசதியான நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் முன் ஓய்வு பெற்று இளைஞர் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்.30 வ‌ருட‌ம் நிறைவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு கட்டாய‌ ஓய்வு அளிக்க‌லாம்..

    ReplyDelete
  5. cps ullavargal join pannathe 9 years or 9 and off yeras complete agiirrkku .gpf ullavargal 33 yeras service agiyum innum service seithukittu than iruukanga

    ReplyDelete
  6. cps ullavargal completed service on 8 years or 9 years .30 வ‌ருட‌ம் நிறைவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு கட்டாய‌ ஓய்வு அளிக்க‌லாம்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது ஆலோசனை கூறுவது எந்த அரசு வந்தாலும் காதுகொடுத்து கேட்காதது சும்மா புலம்பதான் முடியும்

      Delete
  7. JACTTO GEO வெளியேறும் நிலையில் இருக்கிறோம் சங்கத்தால் பழைய பென்ஷன் பெற்று தரமுடியுமா கிடைக்கும் சலுகைகளை பெற தடையாக உள்ள சங்கத்தைவிட்டு வெளியவெளியேறுகிறோம்

    ReplyDelete
  8. JACTTO GEO நடத்தும் போராட்டத்தில் இனிவரும் காலங்களில் கலந்துகொள்ள
    மாட்டோம். எதிர்புதெரிவிக்கப்படும்

    ReplyDelete
    Replies
    1. 59 agu kulla seththutta....

      Delete
    2. Why you are using such kind of abusing words. You have to say everything in a polite manner. Such kind of approaches should be avoided.

      Delete
  9. For those employees who are eligible for pension, increasing the retirement age to 59 is not at all a problem. Whenever they retire they get pension. So they (JACTOGEO) oppose the increase of retirement age to 59. Actually it shows their selfishness. If they have true humanity they go for volunteer retirement and give way for youngsters to get recruitment opportunity. But they just avail all benefit such as promotion increment and so on they act to support the youths. No body ready to believe them. But actually this retirement increase will benefit those employee who come under new pension scheme as they never get pension and some other employee who got appointment very late. So for them it is real benefit. JACTOGEO never do any thing favour for these employee.

    ReplyDelete
  10. அர‌சு ஊழிய‌ர்க‌ள் சுய‌ந‌ல‌மில்லாம‌ல் சிந்திக்க‌ வேண்டும்...இந்த‌ அர‌சாணையை நிச்ச‌ய‌ம் இர‌த்து செய்ய‌ வேண்டும்..இளைஞ‌ர்க‌ள் தொட‌ர்ந்து குர‌ல் கொடுக்க‌ வேண்டும்..58 வ‌ய‌து அல்ல‌து 28 வ‌ருட‌ ப‌ணி நிறைவு செய்திருந்தால் அவ‌ர்க‌ளாக‌வே விருப்ப‌ ஓய்வு பெற‌லாம்..அல்ல‌து அர‌சே க‌ட்டாய‌ ஓய்வு அளிக்க‌லாம்..ஓய்வு பெற்றால் வ‌ழ‌ங்கும் தொகையைத் த‌விர்க்க‌வே அர‌சு இந்த‌ த‌வ‌றான‌ முடிவை எடுத்துள்ள‌து..தொகையை த‌வ‌ணைக‌ளாக‌ கூட‌ வ‌ழ‌ங்க‌லாம்..ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கை நியாய‌ம‌ன‌தே..

    ReplyDelete
  11. இளைஞர் மத்தியில் விழிப்புணர்வு கிடையாது.போராட்ட காலத்தில் அரசு ஊழியர்களுக்கு எதிராக தற்காலிக பணிக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில் நமது ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டிய தேவை ஏற்பட்டது.தாமதமாக பணியில் சேர்ந்தவர்களுக்கும் CPS திட்டத்தில் பணி செய்கிறவர்களுக்கும் 21மாத அரியர் டிஎ , சரண்டர் போன்ற இழப்புகளை சந்தித்தவர்களுக்கு ஓய்வு வயதுஉயர்வு சரியான முடிவு.

    ReplyDelete
  12. நாம் மிக மோசமான அரசின் ஆட்சியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.இந்த ஆட்சியில் எந்த தேர்வு முறையிலும் நேர்மை இல்லை.2017ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வு முதல் நடந்து முடிந்த TNPSC தேர்வு வரை ஊழல் இருப்பது உறுதியாகிறது.ஜெயலலிதா அம்மா ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் கல்வித்துறையில் இருந்ததில்லை.அவர்கள் பெற்ற வெற்றியில் முடிந்த வரை மக்களிடம் சம்பாதிக்க வேண்டும் நினைக்கிறார்கள். இவர்கள் இனி வரும் தேர்வு முறையை மிக நேர்மையான முறையில் நடத்தி திறமையானவர்களை பணி நியமனம் செய்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி நோக்கி பயணிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களால் தான் இது போன்று tnpsc Trb ஊழல் Tneb வெளி மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை ஆகியவை வழங்கப்படுகிறது...இளைஞர்களே சிந்திந்து செயல்படுங்கள்...

      Delete
  13. வேலையில்லா பட்டதாரிகளின் நிலையை எண்ணி அரசு செயல்பட வேண்டும்..வேலையில்லா திண்டாடத்தை அதிகரிக்க செய்யும் இது போன்ற திட்டத்தை கைவிட வேண்டும்..25வருட பணிநிறைவு செய்த ஆசிரியர் ஆசிரியர்களுக்கு பணிஓய்வு கொடுத்து வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டும்..இப்படிக்கு வேலையில்லா பட்டதாரி...

    ReplyDelete
  14. 10000 இக் மே‌ற்ப‌ட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உபரி எ‌ன்று அரசுக்கு ஒப்படைப்பு செய்த போது இந்த அமைப்பு என்ன செய்து கொண்ட கொண்டிருந்தது.

    ReplyDelete
  15. There are many teachers crossing 30 years pa. So govt. Should give compulsory vrs to them

    ReplyDelete
  16. ஆசிரியர் நியமனம் 1990 முதல் 1995 வரை முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய ஜெ.ஜெயலலிதா அவர்கள் 8000 இடைநிலை ஆசிரியர்களை TRB மூலம் தேர்வு வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் நேர்முகத்தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்தார்கள். 1996 முதல் 2000 வரை முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இடைநிலை ஆசிரியர்களைய,பட்டதாரி ஆசிரியர்களைய எவ்வித தேர்வுமின்றி நேரடி நியமனம் செய்தார்கள்.மீண்டும் முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய ஜெ.ஜெயலலிதா அவர்கள் 2001 முதல் 2006 வரை கல்வித்துறையில் SSA என்று தொடங்கப்பட்டு அதற்கு BRT பதவிக்கும் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களையும் பெருமளவில் இளைஞர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார்கள்.இவ்வாறு இருக்க தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களில் பெரும்பாலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் சுமார் 40 முதல் 45 வயதில் உள்ளவர்கள் தான் இப்புதிய அரசாணையின் படி பயன் பெறும் நிலையில் உள்ளனர்.எந்த சங்கமாவது தாமாக முன்வந்து நாங்கள் அனைவரும் 25 வருட பணி அல்லது 55 வயது நிரம்பியவர்கள் இளைஞர்களுக்காக ஒற்றை கோரிக்கையை வைத்து ஒரு நாளாவது போராட்டம் நடத்தியதா? அல்லது உறுப்பினர்கள் நாங்கள் பணியிலிருந்து VRS தருகிறோம். தகுதியுள்ள இளைஞரகளுக்கு அந்த வேலையைத்தாருங்கள் என்று கூறியுள்ளதா?
    அரசிடம் போதிய நிதி இல்லை என்று தெரிந்துதான் இந்த அரசாணை வெளியிட்டுள்ளது.ஒப்படைப்பு விடுப்பு காசாக்குதல்,அகவிலைப்படி நிலுவை போன்றவைக்கேட்டு அரசிடம் கோரிக்கை வையுங்கள். அதை விடுத்து எதிப்பு தெரிவிப்பது நியாயமாக தோன்றவில்லை.

    ReplyDelete
  17. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳அன்புடையீர் வணக்கம்:
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 *(தயவுசெய்து இறுதிவரை படியுங்கள்* ) தமிழ்நாடு அரசு ஆசிரியர் ,அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தி உள்ளது. இதனை சிலர் எதிர்க்கின்றனர்... பலர் வரவேற்கின்றனர். மத்திய அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60. இதனை புரிந்து கொள்ளாமல் சிலர் தமிழக அரசு ஏதோ தவறு செய்துவிட்டது போல் ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்க முயல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றினை கூறிக்கொள்கிறேன்... அரசு எத்தனை வயதில் பணி ஓய்வு பெற வேண்டும் என்பதை சொல்லட்டும்..நீங்கள் எந்த வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அந்த வயதில் விஆர்எஸ் கொடுத்துவிட்டு போங்கள்.. இது தான் நியாயம்.. 59 வயது பிடிக்கவில்லையென்றால் 58 வயதில் சம்பந்தப்பட்டவர்கள் வி ஆர் எஸ் கொடுக்கவும். நாட்டு மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் 50,51,52,53, 54,55 வயதில் விஆர்எஸ் கொடுக்கலாம். இதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு இன்று தான் ஆசிரியருக்கும் அரசு ஊழியருக்கும் ஒரு நன்மை நடக்கிறது. அதனையும் கெடுத்து அனைவர் தலையிலும் மண்ணை வாரி போட்டு விடாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக போராடி நெஞ்சில் ரணமும் உடம்பில் புண்ணும் ஜெயில் வாழ்க்கையும் பணம் இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. இதனை சரிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உங்கள் விருப்பம் போல் ஓய்வினை முடிவு செய்து கொள்ளுங்கள் அரசாங்கம் ஓய்வு வயதினை 59 ஆக முடிவுசெய்துள்ளது. எனவே இளைஞர்களுக்கு நன்மை செய்வது போல் பாசாங்கு காட்டாதீர்கள். உண்மையை உணருங்கள் வெளி வேஷம் போடாதீர்கள்.
    ✍31.05.2020 க்கு பின்னர் ஓய்வு பெறுபவர்கள் 59 வயதில் தான் ஓய்வு பெற வேண்டும் அரசு அறிவிப்பு. விருப்பம் இல்லாதவர்கள் இளைஞர்கள் மேல் அக்கறை காட்டுபவர்கள் அதே தேதியில் விஆர்எஸ் கொடுக்கலாமே இதற்கு அரசு எதிர்க்க வில்லையே.
    ✍மத்திய அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்னும் போது ஓய்வு பெறும் வயது 60 ஆகத்தான் இருக்க வேண்டும். விவரம் ஆனவர்கள் சிந்தியுங்கள்.
    ✍ஜாக்டோ ஜியோ என்ற மாபெரும் அமைப்பு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள ஓய்வு பெறும் வயது 59 என்பதனை வரவேற்று பாராட்டி இருக்க வேண்டும்.இதன் மூலம் இராஜதந்திர நடவடிக்கையாக முதல்வருடனான தொடர்பை பயன்படுத்தி நல்லிணக்கம் ஆக மாறி காலங்காலமாக போராடிக் கொண்டிருக்கும் உரிமைகளை மீட்டெடுக்க நல்வாய்ப்பு அமைந்திருக்கும். மேலும் போராட்ட களத்தில் சிறை சென்று தற்பொழுது வரை ஆறாத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகளை ரத்து செய்ய வழிவகை ஏற்படுத்தியிருக்கலாம். ஏன் என்று தெரியவில்லை அரசாங்கம் நல்லதை செய்தாலும் ஒரு கூட்டம் எதிர்க்கிறது. கெட்டதை செய்தாலும் அதே கூட்டம் எதிர்க்கிறது இதில் என்ன வேடிக்கை என்றால் பாவம் உண்மையான நல்லவர்களை பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியர்களே அரசு ஊழியர்களே சிந்தியுங்கள்.
    ✍இந்த ஆண்டு பணி ஓய்வு பெறும் சிபிஎஸ் திட்டத்தில் உள்ள ஆசிரியர் அரசு ஊழியர்கள் மேலும் ஓராண்டு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஏனென்றால் ஓய்வு பெற்ற பின் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களை நாம் பார்த்துள்ளோம். எனவே ஆசிரியர்களே அரசு ஊழியர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள். போலி வேஷம் போட்டு ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் சிந்திக்க விடாமல் குழப்பிக் கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து இனி விலகியே இருங்கள்.
    ✍ ஒன்றைப் பெறுவது கடினம்! பெற்றதை இழக்காமல் காப்பது அதைவிட கடினம்! பல ஆண்டுகளாக போராடிப் பெற்றதை இழந்து கொண்டே இருக்கிறோம். தற்போது தான் ஒன்று கிடைத்திருக்கிறது.... ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! திண்ணைப் பேச்சு போலிகளிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அன்பு உடன்பிறப்புகளே!
    🚡🚡🚡🚡🚡🚡🚡🚡🚡🚡
    ✈️படித்து.... பகிரவும்✈️
    🚡🚡🚡🚡🚡🚡🚡🚡🚡🚡

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு நடிப்பு.... முடியல....

      Delete
    2. Such a lengthy msg with selfish,100 years varaikkum onnumae pannama sampalam vangikkada

      Delete
  18. This year pg trb varum ah? Reply please

    ReplyDelete
  19. Yaarukkuppa trb exam varumunnu theriyum

    ReplyDelete
  20. ஜாக்டோ ஜியோ அமைப்பு அரசியல் வியாதிகளால் மறைமுகமாக இயக்கப்படுவது....

    சிலரின் அரசியல் லாபத்திற்காக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் போராட்டம் எனும் பெயரில் நெருக்கடி தருவதே இவர்கள் வேலை...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி