ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட செயல்முறைகள் CEO வெளியீடு. - kalviseithi

May 16, 2020

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட செயல்முறைகள் CEO வெளியீடு.பத்தி எண் .7 ல் உள்ள அறிவுரைகளை கீழ்கண்டவாறு திருத்தி வாசிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் அவர்கள் பணிபுரியும் மாவட்ட இருப்பிட முகவரியில் உள்ளனரா என்பதனை 18.05.2020 க்குள் பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருப்பின் அவர்கள் 19.05.2020 க்குள் அவர்கள் பணிபுரியும் மாவட்ட இருப்பிடத்திற்கு வருகை தர அறிவுறுத்தப்பட வேண்டும். அரசாணை எண்.239 Revenue & disaster Management ( DM - II ) Dept நாள் 15.05.2020 ல் அறிவுறுத்தப்பட்டுள்ள விகிதாச்சாரத்தின் படி 21.05.2020 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் தங்கள் பள்ளியில் 10,11,12 ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பின் அவர்கள் சார்பான விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தயாரித்து 18.05.2020 பிப 5.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களில் வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.மேலும் மேற்கண்ட படிவத்தின் படி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள 10,11,12 ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையினை மட்டும் 17.05.2020 முப 10.00 மணிக்குள் சார்ந்த பள்ளி ஆசிரியர் பயிற்றுநரிடம் கைப்பேசி மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

14 comments:

 1. Govt should allot duties in their own district using teacher code in emis website.. I want to go to Vellore district from theni .what can I do.. our cm want to solve this problem...

  ReplyDelete
  Replies
  1. நியாய‌மான‌ கோரிக்கை அர‌சு க‌ட்டாய‌ம் ப‌ரிசீலிக்க‌ வேண்டும்...இவ‌ராவ‌து ஆண் ஓர‌ளவு ச‌மாளித்து விடுவார்...ஆனால் பெண் ஆசிரிய‌ர்க‌ளின் நிலைமை அதிலும் கைக்குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் க‌ர்ப்பிணி ஆசிரிய‌ர்க‌ளின் நிலைமை சொல்லி மாளாது..த‌விர‌ மாவ‌ட்ட‌ம் விட்டு மாவ‌ட்ட‌ம் செல்லும் போது தொற்று ப‌ர‌வும் வேக‌ம் அதிக‌மாகும்..

   Delete
  2. Definitely u have a permanent rented house over there.. Then u just apply for a e pass and go to vellore with your family.. Dont make drama.

   Delete
  3. S u r right.i hv 8 month baby. I m totally disappointed

   Delete
 2. please apply E-pass then u can go to Vellore

  ReplyDelete
  Replies
  1. எந்த‌ ஒரு விட‌ய‌த்தையும் சுய‌ந‌ல‌மில்லாம‌ல் ஓர‌ளவு பொதுந‌ல‌த்துட‌ன் சிந்திக்க‌ப் ப‌ழ‌குங்கள் ந‌ண்ப‌ரே...

   Delete
  2. பெய‌ரில் ம‌ட்டும‌ல்லாது ம‌ன‌திலும் கொஞ்ச‌ம் வெள்ளை இருக்க‌ட்டும்

   Delete
  3. Many e pass are rejected

   Delete
 3. Why you can go theni... your job is at Vellore..then you have to stay Vellore only.....govt will follow a schedule...it can't bend for you....

  ReplyDelete
 4. Just because of lock down they would have gone to stay with family. If his wife also govt servant this pbm will come.either one can alone follow this rule.

  ReplyDelete
 5. தமிழ்நாட்டில் ஒரே ஆட்சியின் கீழ் இருவேறு கருத்துகள் செயல்திட்டங்கள் ஒரு முதலமைச்சர் கீழ் இரு கல்வி அமைச்சர்கள் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இதில் உயர்கல்வி அமைச்சரின் பேட்டி கொரோனா முடிந்த பின்தான் கல்லூரிகள் திறப்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பேட்டி கொரானா தாக்கம் இருந்தாலும் 10, 11, 12,ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்தே தீரும் என்ன ஒரு காலக் கொடுமை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று சொன்ன தெய்வத்தின் ஆட்சியா இது

  ReplyDelete
 6. வீட்டுக்கு ஒருத்தர் மட்டும் வேலையில் இருந்தால் பிரச்சினையாக வாய்ப்பு இல்லை. மாறாக அனைவரும் அழைத்துச்சென்றார் பிரச்சனை கட்டாயம் வரும்

  ReplyDelete
  Replies
  1. Correct sir super.பேராசை பெரு நஷ்டம்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி