நம் நாட்டில்
கொரோனா எண்ணிக்கை
100 ஆக இருந்த போது
மக்களிடமிருந்த பயம்,
இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லையே....
ஏன் ???
மனிதர்களின்
உளவியல் ரீதியாக பார்த்தால்
இதற்கு விடை கிடைக்கும்....
"குப்ளர் ரோஸ் மாடல்
"(KUBLER-ROSS MODEL) என்று
ஒரு தத்துவம் உள்ளது.
அதாவது,
மனிதனுக்கு
ஏதேனும்
துக்க நிகழ்வு,
இயற்கை பேரிடர்,
விபத்து போன்றவை நடக்கும்போது
அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான்...
அவை,
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance
1.Denial -
அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்க வில்லை என்று நம்ப மறுப்பது.
உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கோரொனா வராது என்று மறுத்தது.
அப்படியே வந்தாலும்,
நமது ஊர் வெயிலில் அது பரவாது
என்று மீண்டும் மறுத்தது...
2.Anger-
கோபம் கொள்வது.
உதாரணத்திற்கு ,
ஊரடங்கு போட்டு விட்டார்களே,
வருமானம் பாதிக்குமே,
இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே
என்று கோபம் கொண்டது...
3. Bargain-
கொரோனா வராமல் இருந்திருக்கலாமே ,
ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே
என்று உள்ளுக்குள் புலம்புவது...
4. Depression-
இப்படி ஆகிவிட்டதே
என்று மன அழுத்தம்,
மனச்சோர்வு அடைவது...
5. Acceptance -
ஏற்றுக் கொள்வது.
கடைசி கட்டத்தில்
வேறு வழியில்லாமல் ,
அதை ஏற்றுக்கொள்வது.
உதாரணம் :
கொரோனாவுடன் வாழ
பழகிக்கொள்ள தயாராவது...
இந்த 5 நிலைகள் ,
கொரோனாவிற்கு மட்டுமல்ல.
மனித வாழ்வில் தோன்றும்
அனைத்து பிரச்சினைகளுக்கும் பொருந்தும்...
புத்திசாலி என்ன செய்வான் ?
முதல் நிலையிலிருந்து
நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு
அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு
வாழ்வில் முன்னேற்றம் அடைவான்....
ஐந்தாம் நிலைக்கு
செல்லமுடியாமல் சிக்கித் தவிக்கும் நபர்களே மனநோயாளியாகிறார்கள்..!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி