துணையுடன் 10, பிளஸ் 2 தேர்வு மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - kalviseithi

Jun 6, 2020

துணையுடன் 10, பிளஸ் 2 தேர்வு மாற்று திறனாளிகளுக்கு விலக்கு


'துணையுடன் தேர்வெழுதும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதுவதை தவிர்க்கலாம்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா காரணமாக, தள்ளி வைக்கப்பட்ட, 10 மற்றும்பிளஸ் 2 தேர்வுகள், வரும், ஜூலை, 1 - 15ல் நடைபெற உள்ளன. இதில், துணையுடன் தேர்வு எழுதும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுதுவதை தவிர்க்கலாம்.கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளியுடன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மற்றொருவரின் உதவியுடன் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என்பதால், அவர்கள் தேர்வை தவிர்க்கலாம்.இது தொடர்பாக, அவர்கள் தங்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். மாற்று மதிப்பீட்டு திட்டம் மூலம், மாற்றுத் திறனாளி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுதும், பிளஸ் 2 தேர்வு நடைபெறும் நிலையில், டில்லி வட கிழக்கு பகுதியில் மட்டும், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

1 comment:

  1. பாவம் அவர்கள் இது வரை படித்ததெல்லாம் waste.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி