10ம் வகுப்பு மதிப்பெண் தயாரிப்பில் முறைகேடு புகார்: காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை 3 நாட்களில் தொகுக்க தேர்வுகள் இயக்கம் அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2020

10ம் வகுப்பு மதிப்பெண் தயாரிப்பில் முறைகேடு புகார்: காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை 3 நாட்களில் தொகுக்க தேர்வுகள் இயக்கம் அதிரடி உத்தரவு.


முறைகேடுகளை தடுக்க 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை மூன்றே நாட்களில் தொகுக்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் 25 வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேபோல் 11ம் வகுப்புக்கும் சில தேர்வுகள் விடுபட்டிருந்தன. இந்த தேர்வையும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

 தேர்வினை நடத்த அனைத்து பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. தொடர்ந்து, கொரோனா நோய் தொற்றினை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வு மற்றும் விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு மதிப்பெண் தயாரிப்பில் முறைகேடுகளை தடுக்க மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை மூன்றே நாட்களில் தொகுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு  பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் இன்று பிற்பகல் முதல் வருகின்ற 19ம் தேதி வரை மூன்றே நாட்களில் விடைத்தாள் தொகுப்பு பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களுடன் புரோக்ரஸ் கார்டையும் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 22ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் இவற்றை மாவட்ட கல்வி அலுவலர் அறிவிக்கும் பள்ளியில் தவறாமல் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களை தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது..

5 comments:

  1. புதுசா test வைத்து tupicate exam paper செய்து விட்டனர் இதுல என்ன அதிரடி நடவடிக்கை

    ReplyDelete
  2. Many engineering colleges la internal marks fake ah poduvaanga.. appo.. some sample papers ah ezhudhi vaangi vachipaanga (fake mark basis la)..

    Same formula inga apply pannitaanga...

    Emis website la.. ippo editing yaarum pannala.. already potta marks thaan nu govt assure pannanum..

    ReplyDelete
  3. All members fraud only not have money students really pavam they will conduct another public exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி