ரத்தான 10ம் வகுப்பு தேர்வுக்கு மதிப்பெண் வழங்கும் பணி துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2020

ரத்தான 10ம் வகுப்பு தேர்வுக்கு மதிப்பெண் வழங்கும் பணி துவக்கம்


தேர்வு ரத்து செய்யப்பட்ட, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, மதிப்பெண் வழங்கும் பணி,நேற்று துவங்கியது. வரும், 22ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 15ல் நடப்பதாக இருந்து, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 1ல், ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான பாடங்களில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகள், நேற்று அனைத்து பள்ளிகளிலும் துவங்கின.ரத்தான தேர்வை எழுதவிருந்த, அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களையும், அதனுடன் மாணவர்களுக்கான பள்ளி தேர்ச்சி அறிக்கையையும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிலுள்ள மதிப்பெண்களை ஒப்பிட்டு, பள்ளி வாரியாக, வகுப்பு வாரியாக மாணவர்களின்மதிப்பெண் களை பட்டியலிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இப்பணிகள், நேற்று துவங்கின. ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 22ம்தேதிக்குள், இந்த பணிகளை முடித்து, பட்டியலை தாக்கல் செய்ய, அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தேர்ச்சி அறிக்கைக்கு என்ன செய்வது?மாணவரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களுடன், அந்தந்த மாணவரின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் முன்னேற்ற அறிக்கையை இணைக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்வுக்கும், தேர்ச்சி அறிக்கையை, பெற்றோரிடம் காண்பித்து, அதில் கையெழுத்து பெறுவர். ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில், இந்த நடைமுறை இல்லை; விடைத்தாள்களை பாதுகாப்பதும் இல்லை. தேர்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையான, 'பிராக்ரஸ் கார்டு' வழங்கப்படுவதும் இல்லை.அதனால், இந்த உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

நிலைமையை சரிக்கட்ட, அவசரமாக புதிய அட்டைகள் அச்சடித்து, அதில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதில், பல மாணவர்களுக்கு கூடுதல், குறைவு என, மதிப்பெண் வழங்கவும்வாய்ப்புள்ளதாக, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

9 comments:

  1. Wrong Information. Who said govt schools not issued progress card.

    ReplyDelete
  2. அரசுப் பள்ளிகளில் மாணவர் முன்னேற்ற அறிக்கை தயார் செய்யப்படுவதில்லை என்ற கூற்று தவறானது... அரசுப் பள்ளியைத் தானே குறை கூறுகிறோம் யார் கேட்க போகிறார்கள் என்கிற ரீதியில் பதிவுகள் இடுவதை கல்விச்செய்தி வலைதளம் நிறுத்திக்கொள்ள வேண்டும்... அரசுப்பள்ளிகள் பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் உங்களைப் போன்றவர்களுக்கு என்ன தெரியும்? எப்போதுமே குறை கூறுவது மட்டுமே தெரியும்.

    ReplyDelete
  3. அரசு பள்ளிகளில் புரகிரஸ் காட் (மாணவர் முன்னேற்ற அறிக்கை அட்டை) வழங்கப்படுவது இல்லை என உங்களுக்கு தெரியுமா...? எதாவது செய்தியை பதிவிடாதீர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தால் உங்கள் கல்விசெய்தி இணையதளம் காணாமல் சென்று விடும். எங்களை பற்றி அவதூறாக பதிவிட வேண்டாம்...?

    ReplyDelete
  4. காலாண்டு அரையாண்டு மதிப்பெண் அரசுப் பள்ளிகளில் தாராளமாக கொடுப்பது இல்லை முழுஆண்டுத் தேர்வுகளில் மட்டுமே மதிப்பெண் வாங்குவர் என்று தெரிந்து இருப்பினும் நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க இல்லை அனைத்து பெற்றார்களின் சாபங்கள் உங்களுக்கு சேரும் 2013 வ் டெஸ்ட்டில் பாஸ் ஆகி வேலை கிடைக்காமல் அழுது புலம்பி அவர்கள் விட்ட சாபம் அதிமுக வை நிலைகுலைய வைத்து விட்டது மறந்து விட்டீர்களா?

    ReplyDelete
  5. இது தினமலத்தில் வந்த செய்தி.
    தினமலம் எப்போதும் பொய் செய்தியை பரப்பும்.

    ReplyDelete
  6. எனதுமகள் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறாள் தவறாமல் progress card ல் பெற்றோர் கையெழுத்து வாங்க கொடுக்கிறார்கள் .நான் கையெழுத்து போட்டு கொடுத்து உள்ளேன் .கல்வி செய்தி பதிவு தவறானது

    ReplyDelete
  7. எத்தனை தனியார் பள்ளிகளில் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன Mr. Admin

    ReplyDelete
  8. Private teachers only have no answer sheets of quarterly and half yearly exams

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி