10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (ஜூன் 4) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளி யிட்ட அறிவிப்பு: ஊரடங்கு காரண மாக தள்ளிவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 15 முதல் 25-ம் தேதி வரையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மீத முள்ள பாடங்களுக்கு ஜூலை 16, 18-ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த தேர்வு களை எழுதவுள்ள மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இன்று (ஜூன் 4) மதியம் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களின் ஹால்டிக் கெட்டை பதிவிறக்கம் செய்ய லாம்.பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு நேரடியாக வும் ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வு தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலை பேசி எண்களை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர் களும் ஜூன் 8-ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்துக்கு வந்திருப்பதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
In this news 10 th exam dates July 15 th announced. Is it correct or any printing mistake?
ReplyDelete