பரிதாப நிலைக்குள்ளான 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள்! - kalviseithi

Jun 24, 2020

பரிதாப நிலைக்குள்ளான 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள்!


பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் பொது தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் கோவையை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அந்த மாணவர்களுக்கான தனி தேர்வு நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தேர்வுகளும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்து தேர்வு எழுத தயாராக இருக்கும் தனி தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கபட்டு உள்ளனர். அவர்களில் சில மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.


மேலும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது போல தனி தேர்வர்களுக்கான தேர்வு நடத்தபடும் அல்லது நடைபெறாது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மாணவர்கள் கேட்டுகொண்டனர்.

3 comments:

 1. பத்தாம் வகுப்பு தனித்தேர்வும் ரத்து செய்து தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் எனெனில் புதிதாக அனைத்து பாடம் எழுதும் தனித்தேர்வர் உள்ளனர்.எனவே கொரனா தொற்று பிரச்சினை ஓன்றுதான்.எனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு 35%மார்கும் அனைத்து பாடதேர்வர்க்கு.கிரேடு 2 அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம் .அதிகமாக மார்க் கேட்பவர்களுக்கு இன்புருமென்ட் தேர்வு பின்னர் எழுத விண்ணப்பம் செய்யலாம்.என அறிவிக்க வேண்டும்.

  ReplyDelete
 2. Private candidate na yaru...
  Avannuku ipo enna problem...
  En avanuku pass kudukanum..

  ReplyDelete
 3. Avanuku just pass epdi kudupinga...
  Internal assessment iruka

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி