ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு - பத்திரிகை செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2020

ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு - பத்திரிகை செய்தி!


நாடுமுழுவதும் ஆகஸ்டு 15 - ந் தேதிக்குப் பிறகு பள்ளி , கல்லூரிகள் திறக்கப் பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16 - ந் தேதி முதல் பள்ளி , கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட் டுள்ளது. பல்வேறு கட்ட ஊரடங்கு நடவடிக்கைக ளுக்குப் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் , பள்ளி , கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை இருந்து வருகிறது.

இதனிடையே , கொரோனாபாதிப்பு மண்ட லங்களை கருத்தில் கொண்டு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்ப டும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி , பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் உள்ள பள்ளிக் கல்லூ ரிகளை திறப்பது என்றும் சமூக பரவலை கடைபிடித்து , ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்துவது என்று கூறப்பட்டது. எனினும் அத்தகைய முடிவுகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து அண்மையில் செய்தியாளர் களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரி யால் கூறுகையில் , ஆகஸ்டு 15 - ந் தேதிக்கு பிறகு பள்ளி கள் தொடங்கப்படும் . அப்போதைய சூழலை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும். பல்கலைக்கழகங்களும் ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்படும். 10 மற்றும் 12 - ம் வகுப்பு மாணவர்களுக் கான தேர்வு முடிவுகளும் ஆகஸ்டு 15 - ந் தேதிக்குள் அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வு முடிவுகள் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேர்வு முடிவுகள் அனைத்தும் ஒன்றாக வெளியிடப்படும். நீட் தேர்வு ஜூலை 26 - ம் தேதியும் , ஜே.இ.இ. தேர்வு ஜூலை 18 முதல் 23 - ம் தேதி வரை நடத்தப்ப டும்.

இவ்வாறு கூறினார்.

1 comment:

  1. மனிதாபிமானமற்ற அரசாக அம்மாவின் அரசு! 16000 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர் பணியை 5000 ரூ சம்பளத்தில் நியமித்து 16000 குடும்பங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிய அம்மாவின் அரசு தற்போது 9 ஆண்டுகள் ஆகியும் 7700 சம்பளத்தில் தவிக்கவிடுவதோடு மட்டுமல்லாமல் இந்த கொரோனா சமயத்தில் கூட மே மாதச் சம்பளம் இல்லாமல் செய்து வருகிறது இந்த மனிதாபிமானமற்ற அரசு. அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் 12000, 18000 கொடுக்கும் போது எதிலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று கூறும் இவர்கள் கொடுக்காமல் வஞ்சிப்பது ஏன்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி