ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2020

ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்?


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர் மீதான நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை யும் வாபஸ் பெற கல்வித்துறை முன்வர வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பு ( ஜாக்டோ ஜியோ ) சார்பில் என 2019 ஜன . , 22 முதல் 30 வரை போராட்டம் நடந்தது . இதில் பணிக்கு வராதோர் மீது ஒழுங்கு நடவடிக்கை ( 17 பி குற்றக் குறிப்பாணை ) எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் பிப் . , 14 ல் பணிக்கு திரும்பினர் . அவர்கள் மீதானநடவடிக்கைவாபஸ் பெறப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு , ஓய்வூதிய பலன் பெற முடியவில்லை. கொரோனா தடுப்பு பணிக்காக தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் 13 பேர் மீதான நடவடிக்கையை கலெக்டர் பல்லவி பல்தேவ் திரும்ப பெற உத்தரவிட்டார்.

இது போல் வேறு சில மாவட்டங்களில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுரேஷ் கூறியதாவது: கலெக்டர்கள் நடவடிக்கையை வரவேற்கிறோம். ஒரே பல கோரிக்கைக்காக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராடினோம். தேனி உட்பட பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை வருவாய்த்துறை வாபஸ் பெற்றுள்ளது.

அதுபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை வாபஸ் பெற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நியாயமான பதவி உயர்வு , ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வழி ஏற்படும் , என்றார்.

4 comments:

  1. 2021 ல் 17பி திமுகவினால் வாபஸ் பெறப்படும்.

    ReplyDelete
  2. முதலே அத்தைக்கு மீசை முளைகீட்டும்
    அப்புறம் சித்தப்பா என கூப்பிடலாம்

    ReplyDelete
    Replies
    1. Tet pass pannittu waiting la irukara enga vote and enga relation votes ellame DMK ku than...

      Delete
  3. திமுக ஆட்சியில் CPS நீக்கப்படுமா?....7

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி