பிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட பிரிவுகள் அறிமுகம் - kalviseithi

Jun 18, 2020

பிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட பிரிவுகள் அறிமுகம்


பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் ௧ல் சேரும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, புதிய பாடப்பிரிவு கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதனடிப்படையில், மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர் கல்வி குறித்த அச்சத்தை போக்கும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையிலும், தற்போது நடைமுறையில் உள்ள நான்கு பாட பிரிவுகளுடன், புதிதாக சில பாடப்பிரிவுகள், பிளஸ் ௧ வகுப்புக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.

இந்த புதிய பாட பிரிவுகள், நடப்பு, 2020 - 21ம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன. அதனால், பிளஸ் ௧ வகுப்புக்கு, இந்த புதிய பாட பிரிவுகளின்படியே, விரைவில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. பாடப்பிரிவுகள் விபரம்: அறிவியல் பிரிவு  கணிதம், இயற்பியல், வேதியியல் இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் வேதியியல், உயிரியல் மற்றும் மனை அறிவியல் இந்த நான்கு பாட பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.கலை பிரிவு  வரலாறு, புவியியல், பொருளியல் வணிகவியல், கணக்கு பதிவியல் மற்றும் பொருளியல் வணிகவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் அல்லது கணக்கு பதிவியல் வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்; வளர் தமிழ், வரலாறு மற்றும் பொருளியல் தொழிற்கல்வி இதேபோல், தொழிற்கல்வியிலும், மூன்று பாட பிரிவுகள் இருக்கும்.

இந்த பாட பிரிவின்படி, மாணவர்கள், மொழிப் பாடங்களுடன், மூன்று முக்கிய பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்கள், எந்த பாட பிரிவை தேர்வு செய்தாலும், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்தில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.புதிய முறையில் விருப்பம் இல்லாத மாணவர்கள், பழைய பாடத் தொகுப்பையும் தேர்வு செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி