பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வரும், 30க்குள் முடிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2020

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வரும், 30க்குள் முடிக்க உத்தரவு


பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளை, வரும், 30ம் தேதிக்குள் முடிக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச், 24ல் முடிந்தது.இதற்கான விடைத்தாள் திருத்தம், மே, 27ல் துவங்கி, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் முடிந்தது. இதையடுத்து, திருத்தப்பட்ட விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பட்டியலிடும் பணி நடந்தது. பின், விடைத்தாள் திருத்தும்மையங்களில் இருந்து, மாவட்ட அலுவலகத்துக்கு வந்த மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து, அதை தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

தேர்வுத் துறை அலுவலகத்தில், மாணவர்களின் மதிப்பெண்ணை சரிபார்த்து, அவர்களின் பதிவு எண்களை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.இந்த அனைத்து பணிகளையும், இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு முடிந்ததும், ஜூலை, 3ம் தேதி முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

3 comments:

  1. எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Sir..sir..part time teacher mattum illa....enga mathiri 1000 kanakana Pvt teacher indha work tha parkarom.. ungaluku sari engaluku sari indha work parkaradhuku thani income varum...salary kamiya kidikadhu therichum work panna veandam namba or orunal indha job permanent agum nincha wait pannuga but Naanum part time teacher ku apply pannina namba sign podum podhu theliva sollitanga idhu muluka muluka temporary job nu endha time veanumnalum edhumay sollama job la irrudhu thukapadalam nu poatu irrudhuchu adhuvum meri portam nadathinal thandikapaduvir poatu irrudhadhu manshu thotu solunga appudi tha irrudhuchu ...ippa ippudi pesardhu thappu ...adhuvum meri ungala permanent job poatanga happy tha yarum ea ivangala permanent poatingana ketkamudiydhu..kidikardhu kidikum

      Delete
  2. மற்ற துறைகளில் நியமிக்கப்பட்டவர் தொகுப்பு ஊதியத்தில் இருந்து படிப்படியாக காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறையில் மட்டுமே ஒன்பது ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானம் இல்லாதவர்களிடம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி