பிளஸ் 2 மாணவருக்கான ஊக்கத்தொகை தாமதம்; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பில் தொய்வு - kalviseithi

Jun 27, 2020

பிளஸ் 2 மாணவருக்கான ஊக்கத்தொகை தாமதம்; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பில் தொய்வு


வங்கி கணக்கு விபரம் சேகரிப்பு, பதிவேற்றத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் 2019-20 கல்வி ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைநிற்றலை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி அரசுமற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வீதம் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும். 2019-20ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை.ஊரடங்கு காலத்தில் உயர்கல்விக்கான முயற்சிகளை எடுக்க நிதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 ஆயிரம் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்.

இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 பேரின் வங்கி கணக்கு மட்டும் 'எமிஸ்'ல் ஏற்றியுள்ளனர். 3 லட்சத்து 65ஆயிரத்து 974 பேரின் வங்கி கணக்குகள் பதிவேற்றும் பணி நடக்கிறது. 2019-20 ஆண்டுக்கான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்' என்றார்.

1 comment:

  1. Ippiyachu purichukonga tamilnadu education life part time teacher kaila mattum tha irruku...naga ungalukgha mattumay....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி