பணி நீட்டிப்பு ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு சலுகை கிடையாது, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2020

பணி நீட்டிப்பு ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு சலுகை கிடையாது, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி.


பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்ற பிறகு மாணவர்களின் நலன் கருதி பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை தங்களுக்கும் வழங்கக்கோரி ஏராளமான ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.இதுபோன்ற மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரர்களை பணியிலிருந்துவிடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதே கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் பல்வேறு அரசு பள்ளிகளில் பணிபுரிந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்று கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு பெற்ற 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு வயது உயர்வு அரசாணையின் பலனை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் விசாரித்து, மனுதாரர்கள் பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்றுள்ளனர்.

கல்வி ஆண்டின் மத்தியில் ஓய்வு பெற்றதால் மாணவர்களின் நலன் கருதி ஒப்பந்தஅடிப்படையில் அவர்களுக்கு கல்வி ஆண்டு முடிய பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.

15 comments:

  1. Replies
    1. ம‌கா பிர‌பு.. நீங்க‌ இன்னைக்கும் வ‌ந்துட்டீங்க‌ளா!...ம‌கா பிர‌பு...

      Delete
  2. Young people should be appointed in future.extension for further one year not needed

    ReplyDelete
  3. Young people selected very good teacher job one year not future

    ReplyDelete
    Replies
    1. ??????????😊😊😊😊😊😊😊😊

      Delete
    2. என்னதான் சொல்ல வர,😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

      Delete
  4. Any idea regarding Pg trb exam 2020

    ReplyDelete
  5. Appointed posting graduate teacher selected 2020 reply no

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்துட்டாரு இல்ல எங்க தலைவரு!!!!!இப்ப வாங்கடா எவனா இருந்தாலும்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

      Delete
  6. Blouses men loose men tamil writing no english no unai sarupal adipan

    ReplyDelete
  7. BEO தேர்வு பற்றி ஏதேனும் தகவல் உண்டா சார் தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  8. PG TRB English material unit 1 to 10 available with audio contact no 6374357750

    ReplyDelete
  9. ஏன் 59 பற்றி மட்டும்....30க்கு மேலேபற்றி மட்டும் யாரும் பேசமாட்டடேன் என்கிறார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி