'ஆன்லைன்' வகுப்புக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2020

'ஆன்லைன்' வகுப்புக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!


'ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், சைபர் குற்றங்களில் சிக்காமல், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது.

ஏழு கோடி பேர்கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன், 1 முதல், 'ஆன்லைனில்' வகுப்புகள் துவங்கியுள்ளன. பல பள்ளிகள், ஆன்லைன் வகுப்புகளை, தினமும் நடத்தி வருகின்றன.

இந்தியாவில் தற்போதைய நிலையில், ஐந்து முதல் ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள், ஏழு கோடி பேர், ஆன்லைனில் பாடங்களை படிக்க, மொபைல் போன்களை பயன்படுத்துவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, சிறுவர் - சிறுமியர், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகி விடாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கையேடு

இதற்காக, மத்திய அரசின் சார்பில், ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் பிரதியை, www.ncert.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி