பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2020

பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு!


கொரோனா பிரச்னை நீடிப்பதால், புதிய கல்வியாண்டில், பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படவில்லை; திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பிரச்னையை சமாளித்து, புதிய கல்வியாண்டில், கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய, அரசின் சார்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி கமிஷனர், சிஜி தாமஸ் தலைமையிலான குழுவினர், ஆசிரியர் சங்கங்கள்,தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை நிர்வாகிகளிடம் கருத்துகளை பெற்றனர்.இதையடுத்து, முதல் கட்ட அறிக்கையை, தமிழக அரசிடம், குழுவின் தலைவர் சிஜி தாமஸ் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், கூடுதல் வகுப்பறைகள், கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும்மாணவர்களுக்கு இடையே, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.அதற்கேற்ப,சில வகுப்புகளுக்கு முற்பகலிலும், சில வகுப்புகளுக்கு பிற்பகலிலும் பாடங்களை நடத்தலாம். அதன் வழியாக, 50 சதவீத மாணவர்கள் மட்டும், பள்ளிகளில் இருக்கும் வகையில், சமூக இடைவெளியை பின்பற்ற முடியும்.மாணவர்களுக்கு, சீருடையுடன் முக கவசம் கட்டாயம். அதேபோல, அனைத்து மாணவர்களும், பள்ளி இடைவேளை, மதிய உணவு நேரங்களில், கைகளை சோப்பால் சுத்தம் செய்வது அவசியம். அதற்கு ஏற்ற தண்ணீர் மற்றும் குழாய் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளிகளை மூன்றுமாதம் தாமதமாக திறக்கும் போது, அதற்கேற்ப பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும்.அடிப்படை கல்வி மாறாத வகையில், இந்த பாட குறைப்பு இருக்க வேண்டும்.மூன்று பருவ பாடங்கள் மற்றும் தேர்வுகளை, இரண்டு பருவங்களாக மாற்றலாம். அதற்கு ஏற்ப பாடங்களையும், வகுப்பு நாட்களையும், வகுப்பு நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.'ஆன்லைன்' வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வழி, 'அசைன்மென்ட்'களை மாணவர்களுக்கு வழங்கலாம். கல்விதொலைக்காட்சி வழியாகவும் பாடங்களை நடத்தலாம். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி, அவற்றை, 'சிடி'யாக வழங்கி, வீட்டில், 'டிவி'யில் போட்டு பார்த்து, படிக்க வைக்கலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்ட அறிக்கையில், சில பரிந்துரைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவை விரிவான அறிக்கையில் சமர்ப்பிக்கப்படலாம் என்றும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

9 comments:

  1. Correct sir our decision but one missing that mean teacher increase nova

    ReplyDelete
  2. This decision ok but teachers wont teach it clear details explanations and again children will suffer without understanding

    So plan according to children's understanding

    ReplyDelete
  3. Vaippu illai. Only one term

    ReplyDelete
  4. This is a very good method to be
    adapted for a stormy situation,
    like this and things have to be worked out based on this.

    ReplyDelete
  5. குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கும்போதே மத்திய அரசின் முடிவுப்படி பல்வேறு பணியிடங்கள் குறைக்கப்பட்டு நிர்வாகங்களில் பல்வேறு வேலைப்பளு கூடி வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. டி.டி.எட் படித்தவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. டெட் தேர்ச்சி பெற்றும் (கடின உழைப்பில்) வேலை இல்லை என்னும் நிலை உருவாகி 2013 -ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் காலாவதியாகும் நிலை உருவாகிவிட்டது. பகுதிநேர ஆசிரியர்கள் 7700 சம்பளத்தில் பரிதாபமான நிலையில் உள்ளார்கள்(மே மாத சம்பளமும் இன்றி). இதை வெளிக்கொண்டு வந்தால் தான் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட விஷயங்களை யார் வெளியில் கொண்டு வருவது? ஆசிரியர் சங்கம் சார்பாக இந்த விஷயங்களையெல்லாம் வெளியில் கொண்டு வருகிறார்கள். அதற்கும் தடைவிதித்தால் படித்துவிட்டு கஷ்டப்படுவோர்க்கு யார் குரல் கொடுப்பது இப்போதுள்ள வேலைவாய்ப்பற்ற சூழ்நிலையில்???

    ReplyDelete
  6. There is no more options so it is good idea

    ReplyDelete
  7. It is good but the portions should be cut down and during tests and exams one word answers,choose the correct ,match the following .the children should not be taxed too much..They should enjoy their studies rather than mugging up.This way the children get a broader outlook of the lesson. This I would recommend for class 1 to 6.

    ReplyDelete
  8. Already private schools started the online classes. But teachers get only half salarie.

    ReplyDelete
  9. Yes it is a good decision for all of us

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி