அகவிலைப்படியை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம்: ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2020

அகவிலைப்படியை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம்: ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு



அகவிலைப்படியை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்த ஊக்க ஊதியம் ஆசிரியர்களின் பணிக்காலத்தில் 2 முறை வழங்கப்படும். அதேபோல் அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான அட்வான்ஸ் ஊதிய உயர்வை கடந்த மார்சில் தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஆசிரியர்கள் குறித்து குறிப்பிடாததால், ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் உயர்வு ரத்து செய்யப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த அரசாணையை காட்டி, மாவட்ட கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ஜோசப்சேவியர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன் கூறியதாவது: பல ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு உயர்க் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அட்வான்ஸ் ஊதிய உயர்வு மட்டுமே நிறுத்தப்பட்டது.

ஆனால் கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வை தர மறுக்கின்றனர். ஏற்கனவே அகவிலைப்படியை நிறுத்திய நிலையில் ஊக்க ஊதிய உயர்வை நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து முதல்வர், கல்வித்துறை அமைச்சர், துறை இயக்குநர்கள், கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு தெளிவான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.

7 comments:

  1. Incentive yellathium cancel pannanum .,Oru BT asst UG Oru degree la job la joind panitu master degree(PG)
    incentive ku mattum Vera department la padikuranga ithala student ku yenna use

    ReplyDelete
  2. மாணவர்களுக்கு பலன் அளிக்காத இந்த ஊக்க ஊதியம் ரத்து செய்வது சிறந்தது

    ReplyDelete
  3. Part-time teacher ku salary increment panna solunga...

    ReplyDelete
  4. இந்த செய்தி கேட்டு பல குடுமிபிடி குண்டச்சிகளின் கொடுத்த டிண்கு வெடிச்சிருக்கும்.

    ReplyDelete
  5. Teachers only never getting bribe pa, but remain getting more bribe but teachers only build a nation peoples think before you comment .

    ReplyDelete
    Replies
    1. Yes sir. You are true and also our work is, as you say, basic building work for our Nation as well as very transparent, which nobody could challenge. Thankyou sir. . .

      Delete
  6. உங்களுக்கு லஞ்சம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்துகிறார்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி