கொரோனா பிடியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2020

கொரோனா பிடியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்!


சென்னை  தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவி வருவது ஊழியர்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது .

இதனிடையே , பணிக்கு வரும் ஊழியர்கள் அனைவருக் கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கும் வகையில் மாத்திரை களை வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தமிழக அரசின் இதயமாகத் திக ழும் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது . பிரதான கட்டடம் மூன்று தளங்களையும் , நாமக்கல் கவிஞர் மாளிகை பத்து தளங்க ளையும் கொண்டுள்ளன .

இதில் பிரதான கட்டடத்தில் சட்டப் பேரவை , முதல்வர் அலுவலகம் , சட்டப்பேரவைச் செயலகம் , பேரவைத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங் களும் , நிதி , உள் துறை , வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகளும் செயல்பட்டுவருகின்றன .

பத்து தளங்களைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துத் துறைகளின் செயவா ளர்களின் அலுவலகங்கள் , அவர் களது துறைகளின் பிரிவு அலு வலகங்கள் இயங்கி வருகின்றன . மொத்தமாக 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

கரோனா அச்சம் : கடந்த மார்ச் 24 - ஆம் தேதியுடன் சட்டப் பேர வைக் கூட்டம் நிறைவடைந்த தைத் தொடர்ந்து , 144 தடை உத்த ரவு , பொதுமுடக்கம் உள்ளிட்ட உத்தரவுகளை மத்திய , மாநில அரசுகள் பிறப்பித்தன .

இதனால் ,| தலைமைச் செயலகத்தின் பெரும் பாலான துறைகள் மூடப்பட்டன . அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம் , வருவாய் , நகராட்சி நிர்வாக உள்ளிட்ட ஒரு சில துறை கள் மட்டுமே குறைவான பணியா ளர்களைக் கொண்டு இயங்கின . இந்த நிலையில் , கடந்த 15 நாள் களாக சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களைக் கொண்டு தலை மைச் செயலகம் இயங்கி வருகி றது . அதாவது , தினமும் 2,500 பேர் பணிக்குவருகின்றனர்.

அவர்களில் நாமக்கல் கவிஞர் மாளி கையின் ஒவ்வொரு தளத்திலும் , சுமார் 2 பேர் முதல் 5 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது . சட்டப்பேரவை யின் பொது கணக்குக் குழு பிரிவு , பொதுத் துறை துணைச் செயலாளர் உள்ளிட்டோருக்கும்  கரோனா உறுதியாகியுள்ளது .

இடநெருக்கடி நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஒவ்வொரு தளத்திலும் மூன்று துறை கள் செயல்பட்டு வருகின்றன . துறைக்கு 150 பேர் வீதம் , ஒருதளத்தில் 450 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இதனால் , கடும் இடநெ ருக்கடி ஏற்பட்டு தனிநபர் இடை வெளியைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி