பொதுப் பிரிவினர் இட ஒதுக்கீடு:அரசு உத்தரவால் கடும் அதிர்ச்சி - kalviseithi

Jun 12, 2020

பொதுப் பிரிவினர் இட ஒதுக்கீடு:அரசு உத்தரவால் கடும் அதிர்ச்சி


பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர், 10 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்காக, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம்' என, தாசில்தார்களுக்கு உத்தரவிடும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் அனுப்பி இருப்பது, பொதுப் பிரிவினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொதுப் பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இச்சட்டத்தின்படி, இவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு பெற, வருவாய் துறையிடம், வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் பெற வேண்டும்.தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, இட ஒதுக்கீட்டிற்கான வரம்புக்குள் வராமல், குடும்ப ஆண்டு வருமானம், 8 லட்சம்ரூபாய்க்குள் உள்ளோர், இடஒதுக்கீட்டை பெற தகுதியுடையவர்கள்.அதேநேரம், ஐந்து ஏக்கருக்கு மேல், விவசாய நிலம் வைத்திருப்போர், 1,000 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போர், இதற்கு தகுதியற்றவர்கள்.மேலும், பட்டியலிடப்பட்ட சில நகராட்சிகளில், 100 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போர், மற்ற நகராட்சிகளில், 200 சதுர அடிக்கு மேல், வீட்டுமனை வைத்திருப்போரும், இந்த இட ஒதுக்கீட்டை பெற முடியாது.பத்து சதவீத இட ஒதுக்கீட்டு சான்றிதழை பெறுவதற்கான, வருமான சான்றிதழை, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் வருவாயை கணக்கிட்டே அளிக்க வேண்டும் என, தாசில்தார்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இரு தினங்களுக்கு முன், வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழை, 'ஆன்லைன்' வழியாகவோ, நேரடியாகவோ வழங்க வேண்டாம் என, தாசில்தாருக்கு உத்தரவிடும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், கடிதம் அனுப்பி உள்ளார்.இது, பொதுப் பிரிவினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென சான்றிதழ் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

பிராமணர்களை வஞ்சிப்பதா?

அரசின் இம்முடிவுக்கு, உலக பிராமணர் நலச் சங்கத் தலைவர்சிவநாராயணன்,கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:மத்திய அரசு சட்டத்தை, பல மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில், இதுவரை அமல்படுத்தவில்லை. தமிழக அரசு, எங்களை வஞ்சித்து வருகிறது. பல முறை சங்கம் சார்பில், கடிதம் அனுப்பினோம்;எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இரு தினங்களுக்கு முன், வருமான சான்றிதழை, எந்த தாசில்தாரும் கொடுக்க வேண்டாம் என, உத்தரவிட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் மட்டுமின்றி, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பை பறிப்பதற்காக, தமிழக அரசு, வேண்டுமென்று திட்டமிட்டு, இந்த சான்றிதழ் கொடுக்கக் கூடாது என, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

6 comments:

 1. தமிழகத்தில் 3% FC உள்ளவர்களுக்கு எதற்கு 10% இடஒதுக்கீடு ............BC 45% உள்ளனர்..ஆனால் 26.5% ஒதுக்கீடு தான்

  ReplyDelete
 2. முதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை இவர்கள் தான் உருவாக்கினார்கள. இப்போது இவர்களை வஞ்சித்து வறுமை நிலைக்குத் தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குவதும் இவர்களே. வாரத்தில் மூன்று அரை நாட்கள் போக மற்ற நாட்களில் எங்கு சென்று வேலை பார்க்க முடியும்? இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்த ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது? தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பி.எட் படித்தவர்களுக்கு கிடைக்காத நிலை சென்ற ஆண்டு பணிநியமன நடவடிக்கைகளுக்குப் பதிலாக பணியிடங்கள் குறைப்பு என்ற நிலையை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். அதிலும் தற்போது கொரோனா என்ற அரக்கனைக் காண்பித்து வேறு நியமனங்களும் இல்லை என்ற நிலையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படித்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் இருப்பது..... எனவே ஏதோ கால்வயிறு கஞ்சிக்காக வாடும் இவர்களின் கோரிக்கையை கருணையுள்ளத்தோடு பார்த்தால் நல்ல வாழ்க்கையை அளிக்க முடியும். செய்வார்களா?

  ReplyDelete
 3. சரி மற்ற சமுகத்தை சார்ந்த எந்த குடும்பம் ஒரு ஆண்டிற்கு 800000 ரூபாய் வருமானம் கட்டுகிறது.இச்சட்டம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் பயனுள்ளதாயிருக்கும் இதனால் உயர்ந்த சமுகத்தினர் மென்மேலும் உயரவும் தாழ்ந்த சமுகத்தினர் இன்னும் கீழ் நிலைக்கு செல்லவும் வழி வகுக்கும்

  ReplyDelete
 4. yearly income 8 lacham vanguravan elai???

  ReplyDelete
 5. if the limit is 2 lpa the act is ok,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி