2 ரூபாயில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ! பரிசீலனை செய்ய கோர்ட் உத்தரவு. - kalviseithi

Jun 11, 2020

2 ரூபாயில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ! பரிசீலனை செய்ய கோர்ட் உத்தரவு.


கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை அடுத்து, தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி செனை்ன உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் வசந்தகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் எனவும் தெரிவித்தார்.

 மேலும், இந்த மருந்து 2 ரூபாய்க்கு குறைவான விலையே கொண்டது எனவும், இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும் எனவும் இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்தார்.

 மத்திய அரசுத் தரப்பிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுதாரரின் கோரிக்கை மனு, மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

 இதையடுத்து, மருந்து குறித்து ஆய்வு செய்வதற்கான மனுவை மீண்டும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது மனுவை விரைந்து பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என, மத்திய அரசுக்கும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டனர்

3 comments:

  1. முதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை இவர்கள் தான் உருவாக்கினார்கள. இப்போது இவர்களை வஞ்சித்து வறுமை நிலைக்குத் தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குவதும் இவர்களே. வாரத்தில் மூன்று அரை நாட்கள் போக மற்ற நாட்களில் எங்கு சென்று வேலை பார்க்க முடியும்? இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்த ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது? தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பி.எட் படித்தவர்களுக்கு கிடைக்காத நிலை சென்ற ஆண்டு பணிநியமன நடவடிக்கைகளுக்குப் பதிலாக பணியிடங்கள் குறைப்பு என்ற நிலையை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். அதிலும் தற்போது கொரோனா என்ற அரக்கனைக் காண்பித்து வேறு நியமனங்களும் இல்லை என்ற நிலையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படித்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் இருப்பது..... எனவே ஏதோ கால்வயிறு கஞ்சிக்காக வாடும் இவர்களின் கோரிக்கையை கருணையுள்ளத்தோடு பார்த்தால் நல்ல வாழ்க்கையை அளிக்க முடியும். செய்வார்களா?

    ReplyDelete
  2. விரைவில் தடுப்பு மருந்தை அனுமதியுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி