பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2020

பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன்


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கு பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள நிலையில் ஏற்கெனவே உள்ள பாடத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது குறித்து 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்போது செயல்பட துவங்கி உள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்தை அறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பொதுதேர்வை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி

தென்காசி மாவட்டம், இனாம்கோவில்பட்டியைச் சேர்ந்த கனகராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஜூன் 15ம் தேதி நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தவரை டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்துள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பிரச்னை. தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களிடம் மன அழுத்தம் அதிகரிக்கும். அரசின் இந்த முடிவில் தலையிட வேண்டியதில்லை’’ என்றனர். அப்போது, மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக கூறியதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

5 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் என்று 16000-க்கும் அதிகமான குடும்பங்களை 5000 சம்பளத்தில் அமர்த்தி தற்போது 9 ஆண்டுகளாக 7700 வழங்கி வரும் மாண்புமிகு அம்மாவின் அரசே நீ வாழ்க! பகுதிநேர ஆசிரியர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் கருணையற்ற நீங்கள் நீடுழி வாழ்க! 7700-ஐ வைத்து இப்போதுள்ள சூழலில் கால் வயிறு கஞ்சி குடிக்க முடியுமா?

    ReplyDelete
  2. மளிகை 1500 ரூ, அரிசி 1250 ரூ, வாரம் காய்கறிகள் 1000 ரூ வந்தாலும் மாதம் 250 ரூ மிச்சம் தானே Mr.ர். நைட் செக்குரிட்டி வேலைக்கு போயி அந்த வருமானத்த தனியா சேவிங்ஸ் பண்ணலாமே Mr.ர். நான் ATM வாட்ச்மேன் வேலை பாத்து மாசம் 6000ரூ சேமிக்கிறேன் Mr.ர்.

    ReplyDelete
    Replies
    1. Vaadakai unga appan vanthu koduppana mr.irr

      Delete
  3. Watch Anand srinivasan videos in youtube

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி