இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2020

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து!


இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி - ஜூலையில் சோதனை.

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை பரிசோதனை நடத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பு மருந்தை பரிசோதிக்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருத்தை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை ஜூலையில் மனிதர்களிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 comments:

  1. ஜுலை என்றால் நாளைதானே?????சீக்கிரம்?????��������������������

    ReplyDelete
  2. இந்த ஊரடங்கு மூலம் காசு இல்லாம மக்கள் நிறைய பெயர் ரொம்ப கஷ்டப்படுவாங்க கடவுளே. கொஞ்சம் பெயர் சமாளிப்பாங்க.போக போக முடியாது கடவுளே.முதல்வர் ஐயா பாவம்.இதுக்கு மேல முடியாது. ஊரடங்கு சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல.மருந்து கண்டுபிடிப்பு வெற்றி ஆகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மூன்று மாத‌த்திற்கு முன்பே க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌ இம்ப்ரோ உள்ளிட்ட‌ ப‌ல‌ ம‌ருந்துக‌ளையும்,ப‌ல‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் வ‌ழ‌ங்கிய‌ மாற்று ம‌ருத்துவ‌ ஆலோச‌னைக‌ளையும் இந்திய‌ ம‌ருத்துவ‌ க‌ழ‌க‌ம் முத‌லில் விரைவில் ஆய்வு செய்து முடிவை வெளியிடும் வேலையைப் பாருங்க‌...
      அலோப‌தி ம‌ட்டும் தான் தீர்வு என்ற‌ ம‌ன‌நிலையை ம‌க்க‌ளிட‌ம் திணிக்காதீர்க‌ள்...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி