பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) - பயிற்சி அளித்தல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்! - kalviseithi

Jun 12, 2020

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) - பயிற்சி அளித்தல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!


பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் , சென்னை -6

முன்னிலை : முனைவர் ச.கண்ணப்பன் ந.க.எண் : 0099 / பகஇ / பிசி / 2020
நாள் 12.06.2020

பொருள் : பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு Applications of Mathematics in difference domains
( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) - பயிற்சி அளித்தல் - தொடர்பாக

 <<< >>>

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காக , அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிசெய்யும் முதுகலை கணித ஆசிரியர்களுக்கு ' Applications of Mathematics in different domains ' ( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) என்ற தலைப்பில் ஓர் ஆசிரியர் பயிற்சிப் பயிலரங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது .

மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் உள்ள கணிதப் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றபோதும் , கணிதம் கற்பதன் நோக்கம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள இப்பயிற்சி வழிவகுக்கும் . +1 , +2 பாடத்திட்டத்தின் கீழ் கற்கப்படும் கணிதம் உயர்கல்விக்கான அடித்தளமாக இருப்பதால் , அதன் பயன்பாடுகள் குறித்த நுணுக்கங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் இன்றியமையாததாகிறது .

இந்தப் பயிலரங்கு கணிதப் பாடத்தில் திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் கணித ஆசிரியர்களை மேம்படுத்தச் செய்யும் . இச்செயல்சார் பயிலரங்கினை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் , ஏஐசிடிஈ ( AICTE ) ஆகியவற்றின் பயில்தல் தொழில்நுட்ப எட் - டெக் ( Ed - Tech ) கூட்டாளராக உள்ள ஈபாக்ஸ் நிறுவனத்தினர் நடத்த இருக்கின்றனர் .

இவர்கள் கோவிட் -19 பொதுமுடக்கத்தின்போது ஏஐசிடிஈ மூலமாக தங்கள் ஈபாக்ஸ் பயில்தல் தளத்தினை இலவசமாக எல்லா பொறியியல் மாணவர்களுக்கும் வழங்கி , அவர்களது பயில்தல் தடைபடாமல் இருக்க உதவினர் . கணிதம் பொதுவான அடித்தளத்திற்கான பாடமாக இருப்பதால் , இப்பயிலரங்கு வளரும் துறைகளான தரவுப் பகுப்பாய்வு ( data analysis ) , செயற்கை நுண்ணறிவு ( artificial intelligence ) , பொறிக்கற்றல் ( machine learning and அறிவியல்பூர்வ கணித்தலியல் ( scientific computing ) போன்ற துறைகளில் தங்கள் எதிர்காலத்தை மாணவர்கள் அமைத்துக்கொள்வதற்கு உதவும் வகையில் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் .

பள்ளிக்கல்வி இயக்குநர் 6 / 2 D தமிழ்நாடு அரசு கல்வித்துறைப் பாடத்திட்டத்தை அடியொற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிலரங்கு 10 நாள்களுக்கும் . தினமும் 8 மணிநேரம் கீழ்க்கண்ட அட்டவணையின்படி நடைபெறும் :

காலை 9 மணி முதல் 11 மணி வரை - ஈபாக்ஸின் துறை வல்லுனர்கள் வழங்கும் நேரலை பயிற்சி , பின்னர் அதனைத் தொடந்து காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை - ஈபாக்ஸ் இணையவழிப் பயிற்சி ( 1 மணிநேரம் உணவு இடைவேளையோடு 5 மணிநேரப் பயிற்சி ) ஆசிரியர்கள் 6 மணிநேர இணையவழிப் பயிற்சியின்போது 10 நிகழ்நேரப் பயிற்சிகள் ( Realtime exercises / applications / simulations ) செய்வார்கள் . பயிற்சியின்போது எழும் ஐயங்களைத் தீர்க்க வல்லுனர்களின் வழிகாட்டலும் வழங்கப்படும் .

10 நாள் பயிலரங்கு முடியும்போது , ஒவ்வொரு ஆசிரியரும் 100 நிகழ்நேரப் பயிற்சிகளுக்கு விடைகண்டு , திறமையான மாணவர்களை உருவாக்கும் திறன் பெற்றிருப்பார்கள் . ஒவ்வொரு ஆசிரியரின் பயில்தல் வளைகோடு குறித்துப் பயிலரங்கின் இறுதியில் விரிவான அறிக்கையை ஈபாக்ஸ் வழங்குவார்கள் .

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை கணித ஆசிரியர்களுக்கும் இந்த பயிலரங்கை இப்பொது முடக்க காலத்தில் பயிற்சி பெற உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை கணித ஆசிரியர்கள் http://eboxcolleges.com/mathapp இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் 22.06.2020 அன்று தொடங்க உள்ள BootCampi ( துவக்க முகாமில் ) பதிவு செய்து பங்கு பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது .

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதனை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை கணித ஆசிரியர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கு பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

இப்பயிற்சி தொடர்பாக ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் Dr. Balamurugan , Chief Learning Officer , Amphisoft Technologies E - Mail id : balamurugan@amphisoft.co.in D Mobile No 9442019192 - க்கு தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது .

 பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

நகல் : 1 . அரசு முதன்மைச் செயலாளர் , பள்ளிக் கல்வித்துறை , சென்னை -9 அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது .

2.ஆணையர் , பள்ளிக் கல்வித்துறை , சென்னை -9 அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி