ஆயுள் சான்று வழங்க ஓய்வூதியர்களுக்கு சலுகை - kalviseithi

Jun 4, 2020

ஆயுள் சான்று வழங்க ஓய்வூதியர்களுக்கு சலுகை


'ஓய்வூதியதாரர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளைகளில், ஆயுள் சான்றை, வரும் செப்டம்பர் மாதம் வரை வழங்கலாம்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் பணிபுரிந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினர், மாதம்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்கள், உயிருடன் இருப்பதற்கான, ஆயுள் சான்றை, ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், வங்கி கிளைகளுக்கு, நேரடியாக சென்று வழங்க வேண்டும்.ஜூன், 30ம் தேதிக்குள் வழங்காதவர்களின் விபரங்கள், சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளில் இருந்து, மின் வாரியத்திற்கு அனுப்பப்படும். அவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும். பின், ஆயுள் சான்று வழங்கியதும், மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும்.மார்ச் இறுதியில் இருந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஓய்வூதியதாரர்களால், தங்களின் ஆயுள் சான்றை, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை, வங்கி கிளைகளில் வழங்கலாம் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, வழங்காதவர்களுக்கு, நவம்பர் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி