பொறியியல், சட்டம், எம்பிஏ மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2020

பொறியியல், சட்டம், எம்பிஏ மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அறிவிப்பு


தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக கல்விக் குழுவின்38-வது கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடைபெற்றது.

இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், சென்னை, மும்பை, டெல்லிஐஐடிக்களின் மூத்த பேராசிரியர்கள், சாஸ்த்ரா பல்கலை டீன்கள், இணை டீன் கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.தற்போதைய இக்கட்டான சூழலில் மாணவர்களின் வருகைப் பதிவு, கடைசி செமஸ்டர் தேர்வு களை நடத்துவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்ரமணியம் விளக்கிப் பேசி, உரிய பரிந்துரைகளையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பொறியியல், சட்டம், கல்வி, எம்பிஏ பிரிவுகளில் 2020-ல்பட்டம் பெறும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் கடைசி செமஸ்டர் தேர்வுகளும், தொடர்ந்து நேரடி மதிப்பீடும் நடத்தப்படும்.ஜூனியர் பேட்ச் மாணவர்களுக்கு இதுவரையிலான அகமதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். விரும்பினால் பின்னர் செம்மைத் தேர்வு (இம்ப் ரூவ்மென்ட்) எழுதலாம்.

ஆன்லைன் கல்விக்கான சூழல் அதிகரித்துவரும் நிலையில், யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ), இந்திய பார் கவுன்சில் ஆகிய அமைப்புகளுடன் கலந்து பேசி குறைந்தபட்சம் 90 கல்வி நாட்கள் என்ற வரையறையை மறுசீரமைப்பு செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 50% வருகைப்பதிவு கொண்டவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி