கல்விக்கட்டணம் குறைப்பா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2020

கல்விக்கட்டணம் குறைப்பா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!


தற்போதைய சூழலில் கல்வி கட்டணத்தை குறைக்க இயலாது என, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய நகரங்களைச் சேர்ந்த முன்னனி தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால் அப்போது பள்ளிகளை திறந்தால் நோய் பரவல் கைமீறி சென்றுவிடும் என்றும், பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு வரவழைப்பதும் சமூக இடைவெளியை பின்பற்றச் சொல்வது கடினம் என்றும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வசதி பெறக்கூடிய நிலை உள்ளதால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பது. சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவழைப்பது, வீடுகளில் இருந்தவாறே பெற்றோர் உதவியுடன் பாடங்களை கற்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

80 சதவீத மாணவர்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியர்களின் ஊதியத்திற்கு செல்வதால் தற்போதைய நிலையில் கல்விக் கட்டணத்தை குறைப்பது சாத்தியமில்லை என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

9 comments:

  1. யாராவது பீஸ் கட்டணாதானப்பா நீங்க கொரைக்க மாட்டேனு சொல்றதுக்கு அதெப்படி நீங்க வாங்க பீஸ் 80 சதவீதம் சம்பலம் கொடுக்ரீங்களா நீங்கல்லாம் நாசமாதாண்டா போவீங்க

    ReplyDelete
  2. அடேய் பாவிகளா பாதி சம்பளத்தை கூட முழுசா போட மாட்டேங்கிறிங்க ஆனால் Fees மட்டும் முழுசா வேனும். கடவுள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்

    ReplyDelete
  3. Tc vanki nan government school pokiren.corona mutinthu vuitutan irunthal

    ReplyDelete
  4. அரசு பள்ளிகளில் தரமான கல்வி திறமையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த மக்கள் மட்டும் தனியார் பள்ளிகள் மீது உள்ள மோகத்தை கை விடுவது போல் தெரியவில்லை.கடன் பட்டாவது தன் பிள்ளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தனியார் பள்ளிகள் மீது மோகம் அற்றவர்களாக?? அவர்கள் பிள்ளைகளும் தான் அங்கு படிக்கிறார்கள்..அரசு ஆசிரியர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை ..இதுவே உண்மை..

      Delete
  5. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  6. நீங்கள் குறைக்க வேண்டாம்.

    இந்த ஆண்டு நாங்கள் கட்டப்போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. Fees pay pannalana tc vankinu vera engaiyavathu ponganu solluvangalee sir.

      Delete
  7. Ivanunga fees kuraika matanunga.. Ana sambalam poda matanunga...
    Parents than mudivu pannanum, management ila

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி