தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்!' - kalviseithi

Jun 21, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்!'


ஊரடங்கால் மூடப்பட்ட தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பெரும் அல்லல்படும் நிலைமை உருவாகி உள்ளது. எனவே, அவர்களின் நலனை காக்கும் வகையில், பள்ளிகளின் தன்மைக்கேற்ப, கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வசூலிக்கும் திட்டத்தை, அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், நாடு முழுவதும் உள்ள, பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படா விட்டாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது.தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு, 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க வேண்டிய அவசியம், பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசு தடை

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், போதிய வருவாய் மற்றும் நிதி கையிருப்பு இல்லாததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.இதை கருத்தில் கொண்டு, மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதற்கு, அரசு அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் கோரிக்கைவிடுத்து உள்ளன.ஆனால், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, பள்ளிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதால், கட்டணம் வசூலிக்க முடியவில்லை.அதனால், ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.தற்போது, பெரிய நிறுவனங்களே, பொருளாதார நெருக்கடியால், ஊழியர்களுக்கு, 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துள்ளன.அப்படி இருக்கும் போது, கட்டணம் வசூலிக்காமல் எப்படி, தனியார் பள்ளிகளால் சம்பளம் வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களிடம், குறிப்பிட்ட சதவீத அளவுக்கு கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கைஎழுந்துள்ளது.

நிபந்தனை

'விருப்பம் உள்ள பெற்றோர், கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். மற்றவர்களை கட்டாயப்படுத்தி, எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ, போன் வழியாகவோ, நேரில் பணியாளர்களை அனுப்பியோ வற்புறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், இந்த தடையை நீக்கலாம்' என, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை அரசு கவனிப்பது போல, தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனையும், அரசு கவனித்து கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

இலவச சேர்க்கைக்கான கட்டணம் கிடைக்குமா?

'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம், 60 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.'இந்த தொகையை, அரசு உடனே வழங்கினால், மாணவர்களிடம் கட்டணம் பெறாமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வசதியாக இருக்கும்' என்றும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆறு மாதங்களுக்கு கட்டணம், 'கட்'

கல்வி கட்டணத்தை ஆறு மாதம் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் தாக்கல் செய்து உள்ள மனு:

கொரோனா பேரிடர் காலத்தில், மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.ஆனால், சில பள்ளிகள் கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்துகின்றன.அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆறு மாதங்களுக்கு, கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையின் போது, தமிழக அரசு உரிய முடிவு எடுத்து, பெற்றோர், மாணவர் நலன் மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, உரிய பதில் அளிக்க வேண்டும்.ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, கட்டணம் வசூலிக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

22 comments:

 1. Already some schools opted for layoffs;some paid 50% salary;some schools paid part amount ;private school employees are also human beings; So let the govt take proper decisions regarding fees without affecting the future of the private school employees and management

  ReplyDelete
 2. thank u kalviseithi...plz support private schools teachers.. we are depending only school salary..plz help government.

  ReplyDelete
 3. Private school are already received RTE25% amount and the collected 80% school fees before march also due to Holiday no expense for schools. so Private school Management only cheating their staff

  ReplyDelete
 4. No salary last 3 Months. I am a Private School Teacher.

  ReplyDelete
 5. 2013 tet passed posting potunga sir innum 1year than valitity irukku

  ReplyDelete
 6. First please stop online classes.Somanyteachers get pressure
  Because of this online class.Government take action.

  ReplyDelete
 7. Private school owner Kita paname illaya irukura panathula salary podalamla yn pasanga kodutha tha poduvangala ithuvaraikum kolla adicha panam ellam enge

  ReplyDelete
  Replies
  1. Kallakurichi district la irukaraaa private schools romba worst. Knowledge full education ye ketaiyathu.

   Delete
 8. Iam working in a goverment aided school as a management staff but still iam getting salary. Some persons and management only cheating. Please ask them and then they will collect from students

  ReplyDelete
 9. Private school teachers are so sad ,, but their correspondence live luxuries life ,so please not allow to receive the fees from the people

  ReplyDelete
 10. Dear Teachers, what we are saying here is utter waste. Private Institutions never lend their ears us. Even I am working in a well known Institution, we contribute lot Admission, and we are taking online classes and conducting test too. Our work starts at 9:00 and over at 6:00. But we have to work upto 11:00PM to prepare PPT for next day classes. If we are in college or school mostly our work ends by 5:30 itself. Now we are doing double the work but pay is very meger. Especially family man like me suffered a lot. Government has to take action regarding this issue. Else they lose dedicated staff. How long we survive without money? Moreover public has opinion that these people are Teachers and Professors so they have enough money. But we people only know what is the exact scenario.

  ReplyDelete
 11. I am also working in private school.our management gave only 50%salary for last month.this month no salary yam.but we want to take online class am. Please government to anything positive for private school teachers.

  ReplyDelete
 12. I'm a govt teacher but my sister is private teacher she didn't get salary for 3 months. her family suffers.i knew the pain. Please take any good actions for regularising their salary issues

  ReplyDelete
 13. O my God please help us salary issues

  ReplyDelete
 14. What ever decision please take it fast, because of online class. Private teachers are getting more pressure

  ReplyDelete
 15. No salary no money no other job .

  ReplyDelete
 16. ���� govt school parttime teachers nilamay picay edurom

  ReplyDelete
 17. தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஒன்றாக சேர்ந்து யூனியன் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் இல்லையென்றால் தனியார் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இதுவே ஆரம்பம்

  ReplyDelete
 18. படிக்காத கொத்தனார் தச்சு வேலை செய்பவர்களுக்கு இருக்கின்ற ஒற்றுமை கூட படித்த நம் ஆசிரியர்களுக்கு இல்லை.
  எத்தனை ஆசிரியர்கள் கொத்தனார் மற்றும் ஆசாரி பெரும் சம்பளத்திற்கு சமமாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்
  தனியார் பள்ளிகள் ஆசிரியர் சமூகமே விழித்துக் கொள் ஒற்றுமை அவசியம் யூனியன் அவசியம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி