மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பான CEO அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2020

மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பான CEO அறிக்கை!


அரசாணையின்படி மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த அனுமதி அளித்து கீழ்கண்டவாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Download GO here...

 1. மாணாக்கர்கள் பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை 1 - இல் குறிப்பிட்டுள்ளவாறு பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் தவிர , பகுதி- III இல் புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 500 மதிப்பெண்கள் ) அல்லது தற்போது நடைமுறையிலுள்ள பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை II- இல் குறிப்பிட்டுள்ளவாறு நான்கு முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 600 மதிப்பெண்கள் ) தெரிவு செய்து கொள்ளலாம்.

2. மாணாக்கர்கள் தெரிவு செய்யும் பாடத்தொகுப்பில் உள்ள பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் உட்பட பகுதி- III இல் உள்ள அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

3. புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே திருவள்ளூர் மாவட்டம் , அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் பார்வை 1 - இல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பாடத்தொகுப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் , மேற்படி அரசாணையில் தெவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளியில் நடைமுறைப்படுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள பாடத்தொகுப்புகளுடன் கூடுதலாக பிற்சேர்க்கை -1 ன்படி புதிய பாடத்தொகுப்புகளுக்கான அனுமதியினை பெற விரும்பும் தனியார் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்பு தொடங்குவதற்கான உரிய கருத்துருக்களை முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்து அதற்குரிய அனுமதியினை பெற்ற பின்னரே சேர்க்கையினை துவக்குதல் வேண்டும் . மேலும் எக்காரணத்தை முன்னிட்டும் தொடர் அங்கீகாரம் காலாவதியான தனியார் பள்ளிகளுக்கு புதிய பாடத்தொகுப்பிற்கான அனுமதி வழங்க இயலாது.

மேலும் எந்த ஒரு தனியார் பள்ளிகளும் மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கும் பாடத்தொகுப்பிற்கான அனுமதி கட்டாயம் பெறப்பட்டிருக்க வேண்டும் , சில தனியார் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி மே மாதம் மற்றும் ஜுன் மாதங்களில் மாணவர் சேர்க்கையினை முடித்து விட்டு அக்டோபர் , செப்டம்பர் திங்களில் புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி கோருவதும் , புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமலே பள்ளியை நடத்துவதும் , மாணவர்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடாக உள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. எனவே எந்த வகை மேல்நிலைப் பள்ளியாக இருப்பினும் புதிய பாடத்தொகுப்பு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையினை ( New Admission ) நடத்துதல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பொருள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

13 comments:

  1. Please tell which subjects to be added in 11 standard in the year

    ReplyDelete
  2. Need only one method for 500 or only for 600 don't confuse the students and their parents

    ReplyDelete
  3. In some schools, old pattern is not included this year for 11th standard. They insist us to choose new pattern

    ReplyDelete
  4. second list ready agitu irgu bro

    ReplyDelete
    Replies
    1. நண்பரே சற்று விளக்கமாக சொல்லுங்கள். இரண்டாவது பட்டியல் பற்றிய செய்தி இருந்தால் பதிவிடவும்

      Delete
    2. சக்தி சாா் ௨ண்மைதகவலா? ௨ங்கபோன் நம்பர் கொடுங்க சாா்

      Delete
  5. Any news about pg trb chemistry 2019 new list (or) old lista?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி