கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2020

கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு.


கொரோனா நோய் தடுப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும் , அதன் விவரங்களை இவ்வலுவலக ceoerdb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உடல் ஊனமுற்றோர் , கற்பிணி பெண்கள் , ஐம்பது வயதிற்கு மேற்பட்ட நபர்கள் , கொரோனா தொற்று உள்ளவர்கள் , கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டும் மேற்காண் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. நீங்கள் கூறுவதுபோல் இந்த வேலையும் பகுதி நேர ஆசிரியர்களின் மேல் தான் விழும். முழு நேரமும் பணியாற்றிட வேண்டும். நீட் தேர்விற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு தற்போது நடைபெறுவதை ஏற்பாடு செய்யும் வேலை பகுதி நேர ஆசிரியர்கள் தான் பெரும்பாலான பள்ளிகளில் செய்து வருகிறார்கள்.

    ReplyDelete
  2. Idhumathiri work kidika naga puniyam panni irruka veandum bro idhanmulam namba eppudi patavanga nu ellarukumay theriya varum parttime conform agidum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி